பான் - ஆதார் இணைக்காவிடில் ரூ.10,000 அபராதம்?

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (22)
Advertisement
புதுடில்லி :'பான்' எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், 'ஆதார்' எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஆதாருடன் இணைக்காத பான் கார்டு செயல் இழந்ததாக அறிவிக்கப்படும். அந்த கார்டை பயன்படுத்தினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. மார்ச் 31 வரை'பான் கார்டு எண்ணுடன் ஆதார்
 பான் , ஆதார் ,  அபராதம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி :'பான்' எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், 'ஆதார்' எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஆதாருடன் இணைக்காத பான் கார்டு செயல் இழந்ததாக அறிவிக்கப்படும். அந்த கார்டை பயன்படுத்தினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.பான் ஆதார் இணைக்காவிட்டால் ரூ10,000 அபராதம் ? ........

மார்ச் 31 வரை


'பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்' என மத்திய நேரடி வரிகள் வாரியம் 2017- ஜூலை 1-ல் அறிவிக்கை வெளியிட்டது. அதன்பின் பான் -- ஆதார் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதற்கான காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பான் - ஆதார் இணைப்புக்கான அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. மார்ச் 31க்குள் இணைக்காவிட்டால் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டு செயல் இழந்ததாக அறிவிக்கப்படும். அந்த பான் கார்டை பயன்படுத்துவோருக்கு வருமான வரித்துறை சார்பில் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.செயல் இழந்த பான் கார்டை வைத்திருப்போர் மீது வருமான வரித்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.


கண்காணிப்பு


எனினும் செயல் இழந்த பான் கார்டை வங்கி கணக்கு துவக்குவது ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்தல் உள்ளிட்டவைக்கு அடையாள ஆவணமாக பயன்படுத்தினால் அதற்கு அபராதம் விதிக்கப்படாது.ஆனால் செயல் இழந்த பான் கார்டை அடையாள ஆவணமாக காட்டி வங்கி கணக்கு துவங்கப்பட்டால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் 'டிபாசிட்' செய்யும் போது பல்வேறு சிக்கல்களைசந்திக்க வேண்டியிருக்கும். ஏனெனில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலான பரிவர்த்தனைகள் வருமான வரித்துறையின் கண்காணிப்பில் வரும். அதனால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தாலோ பணம் எடுத்தாலோ பான் கார்டு எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். செயல் இழந்த பான் கார்டு எண்ணை சமர்ப்பித்தால் பணத்தை டிபாசிட் செய்ய முடியாது; எடுப்பதும் பிரச்னையாகிவிடும்.


பான் கார்டு செயல் இழந்துவிட்டால் புதிய கார்டு பெற விண்ணப்பிக்கத் தேவையில்லை. ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைத்தால் உடனடியாக பான் கார்டு செயல்பாட்டுக்கு வந்து விடும்.இவ்வாறு அவர் கூறினார்.வருமான வரித்துறை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பான் - ஆதார் இணைப்பை மேற்கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிவா - Aruvankadu,இந்தியா
16-ஜன-202219:36:50 IST Report Abuse
சிவா ஆதார் எண் பான்கார்டு மாநில ரேஷன் அட்டை மூன்றையும் இணைத்தால் நாடு உருப்படும்.
Rate this:
Cancel
Nallappan - Singapore,சிங்கப்பூர்
16-ஜன-202218:33:57 IST Report Abuse
Nallappan இன்னும் 15 லட்சம்னு எப்ப பார்த்தாலும் கூவுறதை பார்த்தா இவங்களெல்லாம் 15 லட்சம் மட்டும் கொடுத்தால் என்ன.. வேனுனாலும் செய்வாங்க போலே இருக்கு...
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
16-ஜன-202217:42:53 IST Report Abuse
m.viswanathan பொது மக்களுக்கு தான் இந்த மாதிரி சட்டங்கள் , பயமுறுத்தல்கள் அனைத்தும் , அரசியல் வாதியாகி , மக்கள் பணத்தை முழுங்கும் , எவருக்கும் இதெல்லாம் பொருந்தாது. இரண்டு நாட்கள் பரபப்பு செய்தியாக , வந்து , ஏதோ, மத்தியில் ஆள்பவர் கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்தி அறிவித்து , நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என விளம்பரம் செய்து , ஊழல் செய்தவன் மத்தியில் உள்ளவன் கட்சியில் சேர்ந்து விட்டால் , புனிதனாகிவிடும் வினோத அமைப்பு கொண்ட நாடு , இறைவா இந்த நாட்டை எப்படியாவது காப்பாற்று .
Rate this:
16-ஜன-202219:56:19 IST Report Abuse
ஆரூர் ரங்புரிதல் வேண்டும். இச்சட்டம் அரசியல் சார்ந்ததல்ல🤫 . எல்லாக் கொள்ளையையும் அடித்து விட்டு பின்பு அதனை விவசாய வருமானமாக காட்டும் வழி இப்போது ம் உண்டு. அதனால் தான் இது பூச்சிகள் எதற்கெடுத்தாலும் விவசாயம் விவசாயி ஏழை என்றெல்லாம் கூறுகின்றனர் விவசாய வருமானத்திற்கும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால் சிறிதளவு வரி இருக்க வேண்டும். அதற்கும் கணக்கு காட்டியே ஆக வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் அவர்கள் இருக்கும் இடமே தெரியாது அதனால்தான் விவசாய வருமானத்துக்கு வரியே போடக்கூடாது என்று கோஷம் போட்டு 😋நாடகமாடுகிறார்கள். ஆனால் இதுவரை பல பான் கார்டு வைத்திருந்த 420 க்க‌ள் இப்போது தப்பிக்க வழி குறைவு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X