பக்தி இல்லையேல், வாழ்க்கை இல்லை: திருச்சி கல்யாணராமன் 'பளிச்'

Updated : ஜன 16, 2022 | Added : ஜன 15, 2022
Advertisement
எப்படியும் வாழலாம், என்பதல்ல... இப்படித்தான் வாழ வேண்டும் என்பது தான் வாழ்க்கை... இப்படியான ஒரு கட்டுப்பாடு, பாரம்பரியம், கலாசாரத்துக்குள் கட்டுண்டு இருப்பது தான் மனித சமுதாயம். இதற்கெல்லாம், ஆணிவேராக இருப்பது ஆன்மிகம். எம்மதம் சார்ந்தோராக இருந்தாலும், அம்மதம் போதிக்கும் பண்புகளை காக்கும் மானுடர்களாய் வாழ்வது தான் அந்தந்த மதத்துக்கான மாண்பு.ஆண்டுதோறும் அவிநாசி,
 பக்தி இல்லையேல், வாழ்க்கை இல்லை: திருச்சி கல்யாணராமன் 'பளிச்'

எப்படியும் வாழலாம், என்பதல்ல... இப்படித்தான் வாழ வேண்டும் என்பது தான் வாழ்க்கை... இப்படியான ஒரு கட்டுப்பாடு, பாரம்பரியம், கலாசாரத்துக்குள் கட்டுண்டு இருப்பது தான் மனித சமுதாயம். இதற்கெல்லாம், ஆணிவேராக இருப்பது ஆன்மிகம். எம்மதம் சார்ந்தோராக இருந்தாலும், அம்மதம் போதிக்கும் பண்புகளை காக்கும் மானுடர்களாய் வாழ்வது தான் அந்தந்த மதத்துக்கான மாண்பு.



ஆண்டுதோறும் அவிநாசி, ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பக்த பேரவை சார்பில், ஒரு மாத காலம் நடத்தப்படும் மார்கழி மாத தொடர் பொழிவில் பங்கேற்ற, ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன், நம்மிடம் பகிர்ந்து கொண்டவை...


சொற்பொழிவு மக்களை சென்றடைகிறதா? மாற்றத்தை உணர்கிறீர்களா?

நிச்சயமாக மாற்றத்தை காண முடிகிறது. ராமாயணம், மகாபாரத கதைகளை ஒவ்வொருவரும் கேட்க வேண்டும். சொற்பொழிவுகளை கேட்க வேண்டும் என்ற ஆசை மக்களிடம் இருக்கிறது. மதம், இனம், மொழி கடந்து, மனித தர்மத்தை தான் இதிகாசங்கள் போதிக்கின்றன. பக்தி இல்லாமல், வாழவே முடியாது.


சமீபகாலமாக, தொடர் சொற்பொழிவுகளை கேட்க முடிவதில்லையே?

உண்மை தான். கோவில்கள், மடங்கள், மண்டபங்கள் என நிறைய உள்ளன; ஆன்மிக சொற்பொழிவுகளை நடத்துவதற்குரிய கட்டமைப்பு, வாய்ப்பு இருந்தும், பொறுப்பேற்று நடத்த யாரும் முன்வருவதில்லை என்பது வருத்தம் தரக்கூடிய விஷயம். ஆன்மிக சொற்பொழிவுகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்க வேண்டும். நல்ல சிந்தனைகளை கேட்க கேட்கத்தான், அதன் வழியில் நடக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.


மணிக்கணக்கில் உட்கார்ந்துகேட்கும் மனநிலை உள்ளதா...

உலகெங்கும் உள்ள மக்கள் பலர், சமூக வலைதளம் வழியாக, இதுபோன்ற சொற்பொழிவுகளை பார்க்கின்றனர்; கேட்கின்றனர். அவற்றில் லயித்து, மொபைல் போன் வழியாக என்னை தொடர்பு கொண்டு, தங்கள் ஊரில் சொற்பொழிவுகளை நடத்த வேண்டும் என, கேட்கின்றனர். சொற்பொழிவுகள், தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கும்.


சொற்பொழிவில் ஈடுபடும் இளைய சமுதாயத்தினரின் செயல்பாடு குறித்து...

நிறைய இளைஞர்கள், தற்போது சொற்பொழிவாற்றுகின்றனர். இது, வரவேற்க கூடியதே. இளைய தலைமுறைக்கு ஆன்மிக பற்று அவசியம். இதிகாசங்கள் சொல்லும் போதனைகளை, முதலில் முழுமையாக அவர்கள் பின்பற்ற வேண்டும்; அப்போது தான் அவர்களது போதனை பலன் தரும்.


மதம் கடந்து, சொற்பொழிவுகளை பலரும் கேட்பதன் காரணம் என்ன?

பிற மதத்தை இழிவுபடுத்தி தான், தன் மதத்தை வளர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஹிந்து மத கோட்பாடு என்பது அனைவருக்கும் பொதுவானது. 'சனாதன தர்மம்' என்பதுதான், ஹிந்து மதம். 'சனாதனம்' என்றால், காலத்தால் அழியாதது என்பது பொருள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X