பழைய சாலையை சுரண்டாமல் புதுப்பிப்போர் மீது நடவடிக்கை!

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 15, 2022 | கருத்துகள் (11)
Advertisement
சென்னை :தமிழகத்தில் புதிய சாலைகள் அமைப்பதற்கு முன், அங்கு ஏற்கனவே போடப்பட்டு, சேதமடைந்திருந்த பழைய சாலையை முழுமையாக சுரண்டி எடுக்க வேண்டும் என்றும், அதன் பின்னரே அங்கு புதிய சாலை போடப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை மீறி செயல்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நள்ளிரவில் நடந்த சாலைப் பணிகளை, நேரடி கள
 பழைய சாலை, புதுப்பிப்பு, முதல்வர், களம், நடவடிக்கை!

சென்னை :தமிழகத்தில் புதிய சாலைகள் அமைப்பதற்கு முன், அங்கு ஏற்கனவே போடப்பட்டு, சேதமடைந்திருந்த பழைய சாலையை முழுமையாக சுரண்டி எடுக்க வேண்டும் என்றும், அதன் பின்னரே அங்கு புதிய சாலை போடப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை மீறி செயல்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நள்ளிரவில் நடந்த சாலைப் பணிகளை, நேரடி கள ஆய்வு செய்த பின், முதல்வர் ஸ்டாலின் இந்த உத்தரவுகளை பிறப்பித்தார்.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், சாலைகள் போடும் பணிகளில், பழைய சாலைகளுக்கு மேலேயே புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வந்தன. அதனால், பல இடங்களில் சாலை மட்டம் உயர்ந்து, வீடுகள் பள்ளத்தில் இருக்கும் நிலை ஏற்பட்டது.


கோரிக்கை



இதன் காரணமாக, மழைக் காலங்களில் சாலைகளில் தேங்கும் மழை நீர், எளிதாக வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் பல இடங்களில் சாலை போடும் பணிகளை நேரடியாக ஆய்வு செய்தார்; அதனடிப்படையில், அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.அவரது உத்தரவு விபரம் வருமாறு:சென்னையில் சாலை அமைக்கும் பணிகளை, இரவில் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளேன். அப்போது, 'மில்லிங்' செய்யாமல் சாலை போடக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளேன். அதாவது, பழைய சாலையை சுரண்டி எடுக்காமல், புதிய சாலை போடக்கூடாது என
உத்தரவிட்டுள்ளேன்.


அறிவுறுத்தல்



எனவே, புதிய சாலை அமைக்கும் போது, கண்டிப்பாக மில்லிங் செய்த பின்னரே, சாலை போடும் பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதில் தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை மனதில் கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும்.இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


தலைமை செயலர் ஆய்வு



தாம்பரம் மாநகராட்சியில் குடிநீர் குழாய், மின் வடம் பதித்தல் பணி முடிந்த இடங்கள் மற்றும் வெள்ளத்தால் சீர்குலைந்த இடங்களில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பொதுவாக, ஒரு இடத்தில் சாலை அமைக்கும் போது, பழைய சாலையை சுரண்டி, உயரம் அதிகரிக்காதபடி புதிய சாலை அமைக்க வேண்டும். ஆனால், தாம்பரம் மாநகராட்சியில் இதை பின்பற்றாமல், பல இடங்களில் இஷ்டத்திற்கு சாலை பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பல்லாவரம் கட்டபொம்மன் தெரு மற்றும் கிழக்கு தாம்பரம், ஐ.ஏ.எப்., பகுதியில் போடப்பட்டுள்ள சாலை பணிகளை, தலைமை செயலர் இறையன்பு நேற்று முன்தினம் மாலை ஆய்வு செய்தார்.
அப்போது, 'பணியை முறையாக கண்காணிக்காதது ஏன்?' என்று கேள்வி எழுப்பிய அவர், சாலையை சுரண்டி எடுத்து, முறைப்படி அமைக்க உத்தரவிட்டார். மேலும், 'புதிதாக சாலை அமைக்கும் போது, பழைய சாலைகளை சுரண்டி எடுத்து, சாலையின் மட்டம் உயராத வகையில் அமைக்க வேண்டும்.


எச்சரிக்கை



'இதை முறையாக பின்பற்றாத மற்றும் தவறு செய்யும் அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் எச்சரித்தார்.நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், நகராட்சி மண்டல
பொறியாளர் கருப்பையா ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Gomathinayagam - chennai,இந்தியா
16-ஜன-202214:26:34 IST Report Abuse
A.Gomathinayagam போட்ட சாலைகளை திரும்ப திரும்ப போடுவதே ,மக்கள் வரிப்பணத்தை சுரண்ட தான் ,பணத்தை சுரண்டுபவர்கள் எப்படி சாலைகளை சுரண்டுவார்கள் -
Rate this:
Cancel
Bush - Allen, Texas,யூ.எஸ்.ஏ
16-ஜன-202214:20:38 IST Report Abuse
Bush பழைய சாலையை சுரண்டி எடுக்காமல், புதிய சாலை போடக்கூடாது என உத்தரவிட்டுள்ளேன்.டெண்டரிலேயே கண்டிஷன் இருக்கணுமே ..இல்லாவிட்டால் க்ளெய்ம் பண்ணுவாங்களே ..சுரண்டி எடுக்கும் பொருட்கள் மரு சுழற்சி முறையில் பயன்படுத்த நிறைய வழிகள் இருக்கே ..இன்ஜினீயருக்கே இன்ஜினீயரா இருப்பார் போல இருக்கே ..
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
16-ஜன-202212:48:49 IST Report Abuse
sankar அய்யா, தேசி, சுரண்டாமல் ரோடு போடுவது 2011 அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது எங்கிறீர். தொடங்கியது சரி.. ஆனால் வழக்கம் போல் ரோடு போடுவது தானே எங்கும் நடந்தது. அதைத்தான் கண்கூடாக பார்த்தோமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X