இலங்கை அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சு

Added : ஜன 15, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி:இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த, அந்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பான திட்டங்கள் பற்றி, அந்நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவுடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பியிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்தியாவிடம் 73 ஆயிரம் கோடி

புதுடில்லி:இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த, அந்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பான திட்டங்கள் பற்றி, அந்நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவுடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பியிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்தியாவிடம் 73 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவியை கோர திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பேசினர்.

அப்போது இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அங்கு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது பற்றியும், முதலீடு செய்வது பற்றியும் இருவரும் ஆலோசித்தனர். இது குறித்து ஜெய்சங்கர் கூறியதாவது:இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தியா தன்னால் முடிந்த உதவிகளை செய்யும். மேலும், சிறை பிடித்துள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படியும் இலங்கை அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C G Chinnaswamy - Singapore,சிங்கப்பூர்
16-ஜன-202209:39:45 IST Report Abuse
C G Chinnaswamy இனிமேலாவது இந்தியா இலங்கைக்கு பொருளுதவி செய்யும் போது இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க கான்ஸ்டிடியூஷனல் மாற்றத்தோடு முழு நியாயம் கிடைக்க வழி செய்தால்தான் நம் டிப்ளமசி சிறந்தது என்று சொல்லத்தக்கதாகும்
Rate this:
Cancel
D.Swaminathan - Velechery,இந்தியா
16-ஜன-202208:39:20 IST Report Abuse
D.Swaminathan CCP chinese policy for all loan matters to other countries are well defined. Any delay in paying loan land occupation of the country at equal amount was clearly mentioned in the loan document and any dispute between two countries will be carried out only Chinese Court. If the loan payment delayed are postpone, China will not give any consideration. Such a way they are handling wisely in all the loan matter with the other countries. We request, India also can dictate some of the conditions to Sri Lanka considering the national interest and safety. If India think. it can pay total loan amount to china drive out China from Sri lanka, and keep the entire control. If this is done, hope india will safe.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X