புதுடில்லி:இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த, அந்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பான திட்டங்கள் பற்றி, அந்நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவுடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பியிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்தியாவிடம் 73 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவியை கோர திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பேசினர்.
அப்போது இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அங்கு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது பற்றியும், முதலீடு செய்வது பற்றியும் இருவரும் ஆலோசித்தனர். இது குறித்து ஜெய்சங்கர் கூறியதாவது:இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தியா தன்னால் முடிந்த உதவிகளை செய்யும். மேலும், சிறை பிடித்துள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படியும் இலங்கை அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE