நடிகை கன்னத்தை ஒப்பிட்டு சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ.,| Dinamalar

நடிகை கன்னத்தை ஒப்பிட்டு சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ.,

Added : ஜன 15, 2022 | |
ராஞ்சி:''நடிகை கங்கணா ரணாவத்தின் கன்னங்களை விட மென்மையான சாலைகள் கட்டமைக்கப்படும்,'' என பேசி, ஜார்க்கண்ட் மாநில காங்., - எம்.எல்.ஏ., சர்ச்சையில் சிக்கி உள்ளார்.ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்., கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜம்தாரா தொகுதியில் காங்., கட்சியைச் சேர்ந்த டாக்டர் இர்பான் அன்சாரி

ராஞ்சி:''நடிகை கங்கணா ரணாவத்தின் கன்னங்களை விட மென்மையான சாலைகள் கட்டமைக்கப்படும்,'' என பேசி, ஜார்க்கண்ட் மாநில காங்., - எம்.எல்.ஏ., சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்., கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்குள்ள ஜம்தாரா தொகுதியில் காங்., கட்சியைச் சேர்ந்த டாக்டர் இர்பான் அன்சாரி எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.டாக்டரான இவர், 'முக கவசத்தை நீண்ட நேரம் அணிவதால் பல பிரச்னைகள் ஏற்படும்' எனக்கூறி, சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் தொகுதி மக்கள் மத்தியில் நேற்று பேசிய இர்பான் அன்சாரி கூறியதாவது: ஜம்தாரா தொகுதியில் உலகத் தரம் வாய்ந்த 14 சாலைகள் விரைவில் கட்டமைக்கப்பட உள்ளன. திரைப்பட நடிகை கங்கணா ரணாவத்தின் கன்னங்களை விட, மிகவும் மென்மையானதாக அந்த சாலைகள் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
இர்பான் அன்சாரியின் இந்த பேச்சு அடங்கிய, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X