ஜன., 16 ம் தேதி தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கொண்டாடப்படும்:பிரதமர் அறிவிப்பு| Dinamalar

ஜன., 16 ம் தேதி தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கொண்டாடப்படும்:பிரதமர் அறிவிப்பு

Updated : ஜன 15, 2022 | Added : ஜன 15, 2022 | |
புதுடில்லி:''நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் துவக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் ஜன., 16 ம் தேதி, தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கொண்டாடப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.புதுமையான முயற்சிகளின் அடிப்படையில் இளைஞர்கள் சுயவேலை வாய்ப்புகளை உருவாக்கி கொள்வதற்காக ஸ்டார்ட்அப் எனப்படும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி

புதுடில்லி:''நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் துவக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் ஜன., 16 ம் தேதி, தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கொண்டாடப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.


புதுமையான முயற்சிகளின் அடிப்படையில் இளைஞர்கள் சுயவேலை வாய்ப்புகளை உருவாக்கி கொள்வதற்காக ஸ்டார்ட்அப் எனப்படும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஆறாவது ஆண்டையொட்டி நாடு முழுதும் உள்ள 150 ஸ்டார்ட்அப் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்


.'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்த இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி பேசியதாவது:நம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. நம் நாட்டின் முதுகெலும்பாக இந்த நிறுவனங்கள் விளங்குகின்றன.உலக அளவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இந்தியாவின் கொடியை பறக்கவிட்டுள்ள இளைஞர்களுக்கு வாழ்த்துகள்.


இந்த முயற்சி நாடு முழுதும் பரவ வேண்டும். அதை ஊக்குவிக்கும் வகையில் ஜன., 16ம் தேதி, தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கொண்டாடப்படும். நாம் 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது நாட்டின் வளர்ச்சியில் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்களிப்பு மிகப் பெரிதாக இருக்கும்.


புதுமை முயற்சிகளை சிறிய நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு சவால்களுடன் பெரிய வாய்ப்புகளும் கிடைக்கும்.உலகளவிலானதாக உங்கள் கனவுகள் இருக்க வேண்டும். அதே நேரத்தில் உள்ளூருக்கு பயன்படும் வகையில் அது இருக்க வேண்டும். இந்தியாவுக்கானதாக உங்கள் புதுமை முயற்சிகள் இருக்க வேண்டும்.


தற்போது நாட்டின் 625 மாவட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் வளர்ச்சி இதில் இருந்து புரியும்.புதுமை முயற்சிகளில் நம் நாடு வேகமாக முன்னேறி வருகிறது. சர்வதேச புதுமை முயற்சிகள் பட்டியலில் 2015ம் ஆண்டில் 81வது இடத்தில் இருந்த நாம், தற்போது 46வது இடத்துக்கு முன்னேறிஉள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.கட்சியினருடன் சந்திப்பு


சட்டசபை தேர்தல் நடக்கும் உத்தர பிரதேசத்தில் உள்ள தன் தொகுதியான வாரணாசியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோருடன், பிரதமர் நரேந்திர மோடி 18ம் தேதி உரையாட உள்ளார்.தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் மோடியின் முதல் அரசியல் சந்திப்பாக இது அமைய உள்ளது.


'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் இந்த சந்திப்பு நடக்க உள்ளதாக பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது. திருவள்ளுவர் தின வாழ்த்துதிருவள்ளுவர் தினத்தையொட்டி சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:


திருவள்ளுவரின் கோட்பாடுகள், கருத்துகள் மிகவும் ஆழமிக்கவை மற்றும் நடைமுறைக்கு ஏற்றவை. பன்முகத்தன்மை மற்றும் அறிவுப்பூர்வமானவை. கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவகத்தை 'வீடியோ' எடுத்தேன். அதை இப்போது பகிர்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.மாணவர்களுக்கு அறிவுரை!


தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுடன் 'பரிக்ஷா பே சர்ச்சா' என்ற நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு நடக்கும் நிகழ்ச்சி குறித்து பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். அந்த நிகழ்ச்சி வாயிலாக நாட்டின் திறமை மிக்க இளைஞர்களுடன் பேசுவதற்கும், அவர்களுக்கு உள்ள சவால்களை அறியவும் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X