வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : ''இரண்டு வாரங்கள் மக்கள் ஒத்துழைத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தலாம்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள கட்டளை மையத்தை, ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டி: நாட்டில் 2.68 லட்சம் பேர் 'ஒமைக்ரான்' தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 22 ஆயிரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பொது மக்களின் ஒத்துழைப்பு, மிக அவசிய தேவையாக உள்ளது. ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டளை மையம் அமைக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
![]()
|
தமிழகத்தில் மொத்தம் 1.91 லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன, அதில், கொரோனாவுக்கு மட்டும் 1.28 லட்சம் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 8,595 படுக்கைகளில் நோயாளிகள் உள்ளனர். இது, மொத்த படுக்கைகளில் ௭ சதவீதம்.
தமிழகத்தில் ஒமைக்ரான் மட்டுமின்றி, 10 முதல் 15 சதவீதம் வரை, டெல்டா பரவலும் உள்ளது. மேலும் ஒமைக்ரானை பொறுத்தவரை தடுப்பூசி போடாதோர், முதியோர், கூட்டத்தில் இருப்போருக்கு, அதிக பாதிப்பு வர வாய்ப்புள்ளது. கொரோனா அறிகுறிகள் உள்ளோர், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில், 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 63 லட்சம் பேர், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. 15 முதல் 18 வயதுடையோரில், 80 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
அடுத்த இரண்டு வாரங்களில் பொது மக்கள் அனைவரும் ஒத்துழைத்து, நோய்க் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தால், தொற்று அதிகரிப்பதை குறைக்கலாம்.
கொரோனா தொற்றை குறைக்க தான் கடற்கரைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE