பாக்.,கில் நிரந்தரமாக தங்க வெளிநாட்டினருக்கு வாய்ப்பு

Updated : ஜன 16, 2022 | Added : ஜன 16, 2022 | கருத்துகள் (20)
Advertisement
இஸ்லாமாபாத்-அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக நிரந்தர குடியிருப்பு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் தங்குவதற்கு வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்க, பாக்., அரசு முடிவு செய்துள்ளது. நம் அண்டை நாடான பாக்., தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பவாத் சவுத்ரி நேற்று கூறியதாவது. அதிக முதலீடுகளை வழங்கும் வெளிநாட்டு மக்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கான அனுமதி வழங்கப்பட

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

இஸ்லாமாபாத்-அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக நிரந்தர குடியிருப்பு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் தங்குவதற்கு வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்க, பாக்., அரசு முடிவு செய்துள்ளது.



latest tamil news



நம் அண்டை நாடான பாக்., தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பவாத் சவுத்ரி நேற்று கூறியதாவது. அதிக முதலீடுகளை வழங்கும் வெளிநாட்டு மக்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கான அனுமதி வழங்கப்பட உள்ளது. இது, பாக்.,கில் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை. ஆப்கானிஸ்தானை விட்டு வேறு நாடுகளுக்கு வெளியேறிய பணக்காரர்கள், பாக்.,கில் முதலீடு செய்து, இங்கு நிரந்தரமாக தங்கலாம்.


latest tamil news



கனடா மற்றும் அமெரிக்காவில் வாழும் சீக்கியர்கள் பாக்.,கில் உள்ள மத வழிபாட்டு தளங்களில் முதலீடு செய்ய விரும்பினால், அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படும். பாக்.,கிற்கு குடிபெயர்ந்து, இங்கு தொழிற்சாலைகளை கட்டமைக்க விரும்பும் சீன நாட்டினர், இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
16-ஜன-202213:07:18 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN இம்ரான் கானின் பொங்கல் நகைச்சுவை. இந்த வருட சிறந்த நகைச்சுவை விருது இம்ரான் கானுக்கு கிடைக்கும்.
Rate this:
Cancel
Vijai - chennai,இந்தியா
16-ஜன-202211:47:15 IST Report Abuse
Vijai வடிவேலு, விவேக் போன்றவர்களை விட பெரிய காமெடியன் இம்ரான் கான். பாகிஸ்தானிகளே எப்போ வாய்ப்பு கிடைக்கும் நாட்டை விட்டு ஓடலாம் என்று காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த லக்ஷணத்தில் ..... அல் காயிதா மற்றும் ஐ எஸ் தான் அங்கு குடி பெயர்வர்.
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
16-ஜன-202210:01:21 IST Report Abuse
Barakat Ali நிரந்தரமா நாசமாக வாய்ப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X