வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புனே: பஸ் டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டதால், 10 கி.மீ., துாரத்திற்கு பஸ்சை ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு பாராட்டு குவிகிறது.

மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு மினி பஸ்சில் ஷிரூர் பகுதியில் உள்ள வேளாண் சுற்றுலா மையத்திற்கு 20க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா சென்றனர்.சுற்றுலாவை முடித்துவிட்டு ஊர் திரும்பிய போது டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உள்ளது.
சாலையிலேயே வண்டியை அவர் நிறுத்தினார். பஸ்சில் பயணித்த யோகிதா சதாவ், 42, என்ற பெண், சிறிதும் தயங்காமல் டிரைவர் இருக்கையில் வந்து அமர்ந்தார். பஸ்சை சாதுர்யமாக இயக்கி அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று நிறுத்தினார்.

வலிப்பு ஏற்பட்ட டிரைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின் 10 கி.மீ., துாரம் பஸ்சை ஓட்டிச் சென்ற யோகிதா, இதர பயணியரை பாதுகாப்பாக இறக்கி விட்டார். யோகிதாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE