வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தடுப்பூசி இயக்கம் துவங்கி இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது. சென்ற ஆண்டு இதே நாளில் (ஜன.,16) பிரதமர் மோடி கோவிட் தடுப்பூசி இயக்கத்தை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக துவக்கி வைத்தார்..
![]()
|
கோவிட் பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு, பாதுகாப்பு நடவடிக்கைகள்,போன்றவற்றை மத்திய மாநில அரசுகள் கடைப்பிடித்து வந்தன. பிரதமர் மற்றும் மாநில முதல்வர்கள் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தி வந்தனர். ஊரடங்கின் காரணமாக நாட்டில் பலரும் வருமானம் இன்றி துன்பத்திற்கு ஆளாகினர். .
முதலாம் அலையின் போது கோவிட் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு நுரையீரல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகள் பாதிப்பு அடைந்தன. அதனால் உயரிழப்பு அதிக அளவில் இருந்தது. இதனிடையே உலக நாடுகள் முழுவதும் தடுப்பூசி தயாரிப்பில் கவனம் செலுத்த துவங்கின. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மன், மற்றும் சீனா போன்ற நாடுகளில் கோவிட் தடுப்பூசி தயாரிப்பில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்தியாவில் புனே சீரம் நிறுவன தயாரிப்பான கோவிஷீல்டு மற்றும் ஐ தராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் என்ற இருவகை தடுப்பூசிகள் பல்வேறு நிலைகளில் சோதனை செய்யப்பட்டு மத்திய சுகாதாரத் துறையின் அங்கீகாரம் பெற்றன. இதைத் தொடர்ந்து இவை பொது மக்களுக்கு செலத்தப்பட்டு வந்தன.
அதையடுத்து உருவான இரண்டாம் அலையின் போது பரவிய டெல்டா வகை வைரஸால் இந்தியா உட்பட உலக நாடுகளில் கோவிட் பரவல் மற்றும் பாதிப்பு மேலும் கூடியது. இரண்டாம் அலையின் போது உயிரிழப்பும் அதிக அளவில் ஏற்பட்டது. அதனால், கோவிட் பரவலை கட்டுப்படுதத இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தீவிரமடைந்தது. மாநில மற்றும் மத்திய அரசுகள் மெகா தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்தின. பொது மக்கள் தடுப்பூசியின் அவசியத்தை உணர விழிப்புணர்வு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன. ஒரே நாளில் இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்த துவங்கினர். இதன் காரணமாக இந்தியாவில் கோவிட் தடுப்பூசி இயக்கம் பெரும் வெற்றி அடைந்தது.
தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வகை தொற்று வேகமாக பரவினாலும் பாதிப்ப அதிகம் இல்லை. மேலும் இந்தியா முழுவதும் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதால் அதை எளிதில் எதிிர் கொள்ள தயாராக அரசு உள்ளது.
![]()
|
ஒமைக்ரான் பரவல் குறித்து மோடி விடுத்துள்ள அறிக்கையில், உலகிலேயே இந்தியாவில் 90சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, கைகளை கழுவது என்பதை நாம் முறையாக கடைபிடிக்க வேண்டும். மக்கள் யாரும் பதற்றம் அடைய தேவையில்லை. என தெரிவித்தார்.
கோவிட் மூன்றாம் அலையை எதிர்கொள்ள இந்தியாவில் 18 லட்சம் கொரோனா படுக்கைகள் தயாராக உள்ளன. குழந்தைகளுக்கு 90,000 கொரோனா படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜனவரி 3ம் தேதி முதல் 15 முதல் 18 வயது நிறம்பிய சிறார்களுக்கும் தடுப்பூசி பணி துவங்கியுள்ளது. மேலும், ஜனவரி 10-ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகின்றன.
ஒமைக்ரான் பரவலால் பாதிப்பு குறைவாக இருந்தாலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு மழு ஊரடங்கினை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தும் படி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE