வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பா.ஜ.,வில் சில முக்கிய தலைவர்கள், தங்களுக்கு சரியான பதவி கிடைக்காததால் கட்சி மேலிடம் மீது அதிருப்தியில் உள்ளனர். இதில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் ஒருவர்.
![]()
|
முதலில் இவருக்கு மனித வள மேம்பாட்டுத் துறை கொடுக்கப்பட்டது. பின் செய்தி ஒலிபரப்பு துறை தரப்பட்டது. அடுத்த சில மாதங்களில் ஜவுளித்துறை கொடுக்கப்பட்டது. பின் அதுவும் பிடுங்கப்பட்டு இப்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளார். முக்கியத்துவம் இல்லாத துறை தரப்பட்டதால் அவர் அதிருப்தியில் உள்ளார். பஞ்சாபில் பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி நடந்த அன்று, பிரதமர் மோடி, அமைச்சர் ஸ்மிருதி இரானியை போனில் அழைத்து இந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தும்படி கூறியுள்ளார்.
![]()
|
தனக்கு நல்ல இலாகா கிடைக்கவில்லையே என நொந்து போயிருந்த ஸ்மிருதிக்கு பிரதமரின் போன் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு மீண்டும் மனிதவள மேம்பாட்டு துறை கிடைக்கும் என்பதற்கான அறிகுறியே பிரதமரின் போன் அழைப்பு என, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறார்.உ.பி., தேர்தல் முடிவுக்குப் பின் மத்திய அமைச்சரவை மாற்றம் நடக்க வாய்ப்புள்ளதாக டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement