தமிழக பிரமுகர் மீது ராகுல் கோபம்!

Updated : ஜன 16, 2022 | Added : ஜன 16, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுடில்லி: வெளிநாட்டிற்கு சென்றிருந்த ராகுல் டில்லி வந்ததுமே ஐந்து மாநில தேர்தல் குறித்து ஆலோசனையில் இறங்கிவிட்டார். 'வெளிநாட்டிலிருந்து யார் வந்தாலும் அவர்கள் ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்; யாரையும் சந்திக்கக் கூடாது' என்பது விதிமுறை; இருப்பினும் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் ராகுல். இரண்டு மூத்த தலைவர்களை டில்லியில் உள்ள

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: வெளிநாட்டிற்கு சென்றிருந்த ராகுல் டில்லி வந்ததுமே ஐந்து மாநில தேர்தல் குறித்து ஆலோசனையில் இறங்கிவிட்டார். 'வெளிநாட்டிலிருந்து யார் வந்தாலும் அவர்கள் ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்; யாரையும் சந்திக்கக் கூடாது' என்பது விதிமுறை; இருப்பினும் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் ராகுல்.



latest tamil news


இரண்டு மூத்த தலைவர்களை டில்லியில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துள்ளார். இதில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர்களை தனித்தனி அறையில் அமர்த்தி விட்டு, தானும் ஒரு தனி அறையில் இருந்தபடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அவர்களுடன் பேசியுள்ளார் ராகுல்.'கோவாவில் பா.ஜ., தோல்வி அடைய வேண்டுமானால், மம்தா பானர்ஜி கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்., போட்டியிட வேண்டும்' என, தமிழகத்தைச் சேர்ந்த தலைவர், ராகுலிடம் கூறியுள்ளார்.


latest tamil news


'கோவாவில் நம் கட்சியின் முக்கிய தலைவர்களை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டவர் மம்தா. என்னைப் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவருடன் கூட்டணி அமைப்பதா' என, ஆவேசப்பட்டுள்ளார் ராகுல். அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், மம்தாவிற்கு உதவி வருகிறார். இவர் தான் காங்-., - திரிணமுல் கூட்டணி வேண்டும் என சில காங்., தலைவர்களிடம் சொல்லி வருகிறார். 'வீடியோ வாயிலாக ஆலோசனை என்றால் எதற்கு எங்களை டில்லிக்கு அழைக்க வேண்டும். சொந்த ஊரிலிருந்தே இதை செய்திருப்போமே' என, அந்த இரண்டு காங்., தலைவர்களும் புலம்பி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VIDHURAN - chennai,இந்தியா
22-ஜன-202215:19:55 IST Report Abuse
VIDHURAN புலம்பத்தான் முடியும் ராகுலிடமா கேட்கமுடியும்?
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
16-ஜன-202217:15:06 IST Report Abuse
DVRR இதை விட ஒரு சிறந்த அறிவிலித்தனம் இருக்கமுடியாது என்னுடைய வீட்டுக்கு கூப்பிட்டு அவர்களுடன் நான் வீடியோவில் எனது பெட் ரூம் அவர்கள் ஹாலில் அமர்ந்து பேசிக்கொள்வோம் பேஷ் பேஷ் பப்புன்னா பப்பு தான்
Rate this:
Cancel
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
16-ஜன-202214:40:35 IST Report Abuse
Velumani K. Sundaram மூணு பேருமே... ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X