இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்: லாரி உரிமையாளர் வீட்டில் ரூ 20 லட்சம் அபேஸ்!| Dinamalar

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': லாரி உரிமையாளர் வீட்டில் ரூ 20 லட்சம் அபேஸ்!

Updated : ஜன 16, 2022 | Added : ஜன 16, 2022 | கருத்துகள் (2) | |
இந்திய நிகழ்வுகள்பண மோசடி வழக்கில் நடிகரின் சொத்து முடக்கம் புதுடில்லி-கடன் வாங்கி பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், ஒரு தொழிலதிபர் மற்றும் நடிகர் ஒருவரின் நிறுவனங்களுக்கு சொந்தமான, மஹாராஷ்டிராவில் உள்ள, 410 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையைச் சேர்ந்த,
இன்றைய, கிரைம், ரவுண்ட், அப்


இந்திய நிகழ்வுகள்
பண மோசடி வழக்கில் நடிகரின் சொத்து முடக்கம்புதுடில்லி-கடன் வாங்கி பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், ஒரு தொழிலதிபர் மற்றும் நடிகர் ஒருவரின் நிறுவனங்களுக்கு சொந்தமான, மஹாராஷ்டிராவில் உள்ள, 410 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையைச் சேர்ந்த, 'ஓம்கார் ரியால்டர்ஸ்' என்ற கட்டுமான நிறுவனம், வங்கியில் 410 கோடி ரூபாய் கடன் பெற்றது.அதை மாற்று நிறுவனங்களில் முதலீடு செய்து, பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.இந்த வழக்கில் ஓம்கார் உள்ளிட்ட நிறுவனங்களில் ஏற்கனவே அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ஓம்கார் நிறுவனத்தின் தலைவர் கமல் கிஷோர் குப்தா, நிர்வாக இயக்குனர் பாபுலார் வர்மா கைது செய்யப்பட்டனர். மேலும், குட்கா மற்றும் பான்மசாலா தொழிலில் ஈடுபட்டுள்ள ஜே.எம்.ஜோஷியும் கைது செய்யப்பட்டார்.ஜே.எம்.ஜோஷி சில படங்களை தயாரித்துஉள்ளார். அவரது மகன் சச்சின் ஜோஷி, தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். இவர்களது நிறுவனங்களுக்கு சொந்தமான மும்பை, புனே உள்ளிட்ட இடங்களில் உள்ள 410 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


தூண் மீது ரயில் மோதல்
வல்சாத்-குஜராத்தில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த சிமென்ட் துாண் மீது, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு மும்பை - டில்லி இடையே இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு, வல்சாத் மாவட்டத்தில் சென்றது.அப்போது அதுல் என்ற ரயில் நிலையத்திற்கு அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த சிமென்ட் துாண் ஒன்றின் மீது ரயில் மோதியது. ரயில் வேகமாக சென்று மோதியதில், அந்த துாண் தண்டவாளத்திற்கு வெளியே சென்று விழுந்தது.எனினும் அந்த ரயில் தொடர்ந்து சென்றது. ரயிலில் இருந்த பயணியர் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரும், ரயில்வே அதிகாரிகளும் தண்டவாளத்தை ஆய்வு செய்தனர்.

அந்த ரயில் தடம்புரண்டு விபத்துக்குஉள்ளாக வேண்டும் என்ற நோக்கத்துடன் சிமென்ட் துாணை, தண்டவாளத்தில் வேண்டுமென்றே மர்ம நபர்கள் வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.இது குறித்து விசாரணை நடக்கிறது. வாரிய தலைவர் ஆய்வுமேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் சமீபத்தில் ரயில் தடம் புரண்டதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த பகுதியை ரயில்வே வாரிய தலைவர் திரிபாதி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.


'ப்ரீலான்ஸ்' பத்திரிகையாளரின் ரூ.48 லட்சம் சொத்து பறிமுதல்புதுடில்லி: சீன உளவு நிறுவனத்திற்கு நம் ராணுவ தகவல்களை தெரிவித்து பணம் வாங்கிய வழக்கில், 'ப்ரீலான்ஸ்' பத்திரிகையாளரின் 48 லட்சம் ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து உள்ளது.

டில்லி பீடம்புரா பகுதியைச் சேர்ந்தவர் ராஜிவ் சர்மா. இவர், எந்த ஒரு குறிப்பிட்ட பத்திரிகை மற்றும் செய்தி நிறுவனத்திலும் அதிகாரப்பூர்வமாக பணியாற்றாமல், பல பத்திரிகைகளுக்கும் செய்திகளை கொடுத்து, அதற்கான தொகையை பெற்றுக் கொள்வார். இவர் சீன உளவுத்துறைக்கு நம் ராணுவ செயல்பாடுகள், எல்லை பகுதிகளில் அவர்களது நடவடிக்கை குறித்த தகவல்களை பகிர்ந்த குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு கைதானார்.இவரது செயல்பாடுகளுக்கு டில்லியை அடுத்த மஹிபால்பூரில் செயல்பட்ட போலி சீன நிறுவனம் நேரடியாகவும், 'டிபாசிட்' வாயிலாகவும் பணம் வழங்கி உள்ளது.

இதையடுத்து அவர் மீது அமலாக்கத் துறையினர் பண மோசடி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த வாரம் டில்லி உயர் நீதிமன்றம் ராஜிவ் சர்மாவுக்கு ஜாமின் வழங்கியது. இந்நிலையில் பண மோசடி வழக்கில் டில்லியில் அவருக்கு சொந்தமான 48.21 லட்சம் ரூபாய் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.


பாலியல் வழக்கு: பாதிரியார் விடுவிப்புகோட்டயம்-கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருந்து, பாதிரியார் பிரான்கோ முல்லக்கல்லை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துஉள்ளது.கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குருவிளங்காடு தேவாலயத்தில் இருந்தவர் பிரான்கோ முல்லக்கல், 57.இவர் 2013 முதல் 2016 வரை தேவாலயத்தில் பணியாற்றியபோது கன்னியாஸ்திரி ஒருவரை மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு பிரிவு போலீசார், பிரான்கோ முல்லக்கல்லை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று முன்தினம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றஞ்சாட்டப்பட்ட முல்லக்கல், தவறு செய்ததற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால், அவரை வழக்கில் இருந்து விடுவிப்பதாக, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதை எதிர்த்து போலீசார் மேல் முறையீடு செய்ய உள்ளனர்.


தமிழக நிகழ்வுகள்
latest tamil news
கொடுங்கையூர் எஸ்.ஐ.,க்கு 'பளார்'சட்டக்கல்லுாரி மாணவன் கைதுசென்னை:சென்னை கொடுங்கையூரில் முக கவசம் அணியாததற்கு அபராதம் விதித்த சப் - -இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த சட்டக்கல்லுாரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.

கொடுங்கையூர் எம்.ஜி.ஆர். நகர் சந்திப்பில் சப் - -இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி முக கவசம் போடாதது குறித்து விசாரித்தார். உடனே அந்த வாலிபர் சட்டைப்பையில் இருந்த முகக்கவசத்தை எடுத்து போட்டார். ஆனாலும் விதிமீறியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு
சப் - -இன்ஸ்பெக்டர் பழனியின் கன்னத்தில் அறைந்தார்.இது தொடர்பான புகாரின்படி கொடுங்கையூர் போலீசார் வியாசர்பாடி புது நகரைச் சேர்ந்த அப்துல் கரீம் மகன் அப்துல் ரகீம் 21 என்பவரை கைது செய்தனர். இவர் தரமணியில் உள்ள சட்ட கல்லுாரியில் பி.ஏ.பி.எல். 5ம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.கள்ளக்காதல் விவகாரத்தால் விபரீதம் மத்திய அரசு ஊழியர் கொலைசென்னை:குன்றத்துாரில் கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறில் மத்திய அரசு ஊழியர் படுகொலை செய்யப்பட்டார்.

குன்றத்துார் சம்பந்தம் நகரைச் சேர்ந்தவர் பத்மகுரு 37. இவர் அப்பகுதியில் கோழிக்கறி கடை நடத்தி வந்தார். அவரது மனைவி சிந்து 30. பத்மகுருவிற்கு குன்றத்துாரைச் சேர்ந்த மீனா 29 என்ற பெண்ணுடன் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.இதனால் பத்மகுருவின் மனைவி சிந்து சில நாட்களுக்கு முன் மீனாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து விட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மீனா அவரது கணவர் ரஜினி மற்றும் அவரது உறவினர்கள் என ஏழு பேர் நேற்று முன்தினம் இரவு பத்மகுருவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பத்மகுரு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மீனாவின் உறவினர்களான குமரன் 35 விஷ்வா 19 ஆகிய இருவரை குத்தினார்.படுகாயமடைந்த குமரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்; விஷ்வா காயமடைந்தார். போலீசார் விரைந்து குமரனின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காயமடைந்த விஷ்வாவை மாங்காடில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்

.விசாரணையில் கொலை செய்யப்பட்ட குமரன் ஆவடியில் உள்ள மத்திய அரசின் கனரக தொழிற்சாலையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து குன்றத்துார் போலீசார் வழக்கு பதிந்து பத்மகுருவை கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் தட்டிக்கேட்க சென்றவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


லாரி உரிமையாளர் வீட்டில் ரூ. 20 லட்சம் 'அபேஸ்': வருமான வரி அதிகாரிகளாக நடித்த 'டிப்டாப்' ஆசாமிகள்கிணத்துக்கடவு:கோவை அருகே லாரி உரிமையாளர் வீட்டுக்குள் நுழைந்த ஐந்து பேர் குழு வருமான வரித்துறை அதிகாரிகளாக நடித்து 20 லட்சம் ரூபாய் மற்றும் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளுடன் காரில் தப்பியது. மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்தவர் பஞ்சலிங்கம் 53; கருங்கல் குவாரி மற்றும் லாரி உரிமையாளர். நேற்று மதியம் 1:00 மணி அளவில் காரில் வந்திறங்கிய ஐந்து டிப்டாப் ஆசாமிகள் இவரது வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.'வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வீட்டை சோதனையிட வந்துள்ளோம்' எனக்கூறி கதவை சாத்திக்கொண்டனர்.

வீட்டில் இருந்த பஞ்சலிங்கம் அவரது மகளிடம் இருந்த மொபைல் போன்களை பறித்துக் கொண்டனர்.பீரோவில் இருந்த 20 லட்சம் ரூபாய் ரொக்கம் வங்கி பாஸ் புத்தகம் செக்புக் ஆகியவற்றை எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து வீட்டில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி. கேமராவில் காட்சிகள் பதிவாகும் 'ஹார்ட் டிஸ்க்' எடுத்துக்கொண்டு காரில் ஏறி தப்பினர்.

சந்தேகமடைந்த பஞ்சலிங்கம் கிணத்துக்கடவு போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.போலீசார் வழக்கு பதிந்து பக்கத்து வீடுகளில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரிக்கின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் கிணத்துக்கடவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ. 3 லட்சம் டம்மி நோட்டு சிவகாசியில் ஐவர் கைது


சிவகாசி:கடனாக வாங்கிய ரூ. 3 லட்சத்துக்கு டம்மி நோட்டு கட்டுகள் வழங்கி ஏமாற்றிய ஐந்து பேர் சிவகாசியில் கைது செய்யப்பட்டனர்.

சிவகாசி வேண்டுராயபுரம் மலையூரணி பட்டி நடுத் தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து 55. இவரிடம் திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்த சீமைச்சாமி 52, தேனி காரிப்பட்டி சரவணன் 45, உசிலம்பட்டி சங்கர் 40, மதுரை தத்தனேரி மருது 33, உத்தமபாளையம் காளிராசன் 31, ரூ. 3 லட்சம் வாங்கியிருந்தனர்.

இவர்களிடம் காளிமுத்து பணத்தை கேட்டதற்கு கருப்பு மை தடவிய பாங்க் ஆப் இந்தியா என்ற பெயர் அச்சிட்ட டம்மி 500 ரூபாய் நோட்டுக்கள் அடங்கிய 6 கட்டுகளை கொடுத்து ஏமாற்றினர். திருத்தங்கல் போலீசார் 5 பேரையும் கைது செய்து, டம்மி ரூபாய் நோட்டுகள், காரை பறிமுதல் செய்தனர்.


ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ 1.09 லட்சம் இழந்த பட்டதாரி பெண்
சிவகங்கை:'ஆன்லைன்' வர்த்தகத்தில் இரட்டிப்பு வருவாய் கிடைக்கும் என்று வந்த போலி இணையதள முகவரியை நம்பி 1.09 லட்சம் ரூபாய் இழந்த பி.இ., பட்டதாரி பெண், சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

சிவகங்கை காமராஜர் காலனி சஞ்சய் நகரைச் சேர்ந்த பூமிநாதன் மகள் திவ்யா, 26; பி.இ., முடித்து சென்னையில் ஐ.டி., துறையில் பணிபுரிகிறார். தற்போது, ஊரடங்கு காரணமாக சிவகங்கையில் வீட்டில் இருந்து பணி செய்கிறார்.

சுரங்க நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு தொகை பெறலாம் என வந்த போலி இணையதள முகவரியை நம்பி, 2021 டிச., 28ம் தேதியில் இருந்து ஜன., 8ம் தேதி வரை ஆன்லைன் மூலம் 1.09 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார்; பணம் இரட்டிப்பு ஆகவே இல்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்; இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் விசாரிக்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X