ஆன்லைன் வகுப்புகள் ஏன் நடத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்

Updated : ஜன 16, 2022 | Added : ஜன 16, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை--'கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஆன்லைன் வாயிலாக ஏன் பாடம் நடத்தக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மூன்றாவது அலைதிருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் அப்துல் வஹாபுதீன் தாக்கல் செய்த மனு:கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது, பள்ளிகள் முழுதும் மூடப்பட்டு, 'ஆன்லைன்' வாயிலாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை--'கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஆன்லைன் வாயிலாக ஏன் பாடம் நடத்தக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.



latest tamil news



மூன்றாவது அலை

திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் அப்துல் வஹாபுதீன் தாக்கல் செய்த மனு:கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது, பள்ளிகள் முழுதும் மூடப்பட்டு, 'ஆன்லைன்' வாயிலாக பாடம் நடத்தப்பட்டது. தற்போது, கொரோனா மூன்றாவது அலை, தீவிரமாக பரவி வருகிறது. இதனால், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடக்கின்றன.ஆனால், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால், மாணவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இவற்றை கருத்தில் வைத்து, அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


முதல் தவணை

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதாடியதாவது:மழலையர் வகுப்புகள் முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, நேரடி வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது. 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தவே, பள்ளிக்கு அழைக்கப்படுகின்றனர்.நேரடி வகுப்புகள் நடத்துவதும், பங்கேற்பதும் கட்டாயமில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து, பள்ளிகள் முடிவெடுக்கலாம் என, தமிழக அரசு கொள்கை முடிவெடுத்துஉள்ளது. நேரடி வகுப்புகளில் பங்கேற்பது, மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது.இவ்வாறு அவர் வாதாடினார்.


latest tamil news




தள்ளுபடி



இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஆன்லைனில் ஏன் பாடம் நடத்தக் கூடாது?அரசின் கொள்கை முடிவை மீறி, பள்ளிகளை மூட உத்தரவிட முடியாது. எத்தனை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; எத்தனை பேர் மரணம் அடைந்துள்ளனர் என்ற விபரங்கள், மனுவில் இடம்பெறவில்லை. வழக்கறிஞர்கள், பொது நல வழக்கு தொடரக்கூடாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மனுதாரருக்கு அபராதம் விதிக்க முடியும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் கூறியதை தொடர்ந்து, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
16-ஜன-202215:53:09 IST Report Abuse
sankar வளரும் பிள்ளைகளின் கண் பார்வை விரைவில் கெடும் என்பது மட்டும் உறுதி என கண் மருத்வர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கம்ப்யூட்டர் அடிக்ஷன் ஏற்படும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விட்டு விட்டு பாடம் நடத்தலாம். என்ன பார்க்கிறார்கள் என பெற்றோர்கள் கண்காணிப்பது மிக முக்கியம்.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
16-ஜன-202212:28:11 IST Report Abuse
Ram இந்த மாதிரி தேவையில்லாமல் நீதிமன்றத்துக்கு வருபவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கவேண்டும்
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
16-ஜன-202212:02:31 IST Report Abuse
Anbuselvan நாட்டில் அனைவரும் கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன் மற்றும் டேட்டா அனைத்துக்கும் முதலீட்டு செய்யும் அளவுக்கு வசதி ஆனவர்களா? மற்றும் சில இடங்களில் மொபைல் சிக்னல் கிடைக்கவே கிடைக்காது உதாரணம் மலை கிராமங்கள். கூடவே அரசாங்கத்துக்கு இப்படி பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகளை உடனே இலவசமாக செய்து கொடுத்து அதற்கு பிறகு ஆன்லைன் வகுப்புகளை கட்டாயமாக்க உத்தரவே போடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X