சட்டவிரோத ஆயுத தொழிற்சாலைக்கு 'சீல்'

Added : ஜன 16, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
முசாபர்நகர்-உத்தர பிரதேசத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த ஆயுத தொழிற்சாலைக்கு 'சீல்' வைத்த போலீசார், அங்கிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை கைப்பற்றினர். உ.பி.,யில் உள்ள முசாபர்நகர் மாவட்டம் தண்டேரா கிராமத்தில், சட்ட விரோதமாக ஆயுதங்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலை இயங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார் அந்த தொழிற்சாலையை

முசாபர்நகர்-உத்தர பிரதேசத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த ஆயுத தொழிற்சாலைக்கு 'சீல்' வைத்த போலீசார், அங்கிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை கைப்பற்றினர்.

உ.பி.,யில் உள்ள முசாபர்நகர் மாவட்டம் தண்டேரா கிராமத்தில், சட்ட விரோதமாக ஆயுதங்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலை இயங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார் அந்த தொழிற்சாலையை கண்டுபிடித்தனர். தொழிற்சாலைக்கு சீல் வைத்த போலீசார், அங்கிருந்த ஏராளமான ஆயுதங்கள், வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
16-ஜன-202213:07:59 IST Report Abuse
N Annamalai மேக் இந் இந்தியா என்பதை தவறாக புரிந்து கொண்டுள்ளார் போல் உள்ளது .தேர்தலின் போது முன் எச்சரிக்கையாக இந்த இடம் சீல் வைத்தது பெரிய கலவரங்களை தடுத்து உள்ளது .காவல் துறைக்கு பாராட்டுகள் .
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஜன-202210:38:45 IST Report Abuse
Lion Drsekar எல்லாமே எல்லோருக்கும் என்றைக்குமே எப்போதுமே தெரியும், சமூக விரோதிகளை உருவாக்குவதும் வளப்பதும், அடைக்கலம் கொடுப்பது .... உலகறியும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜன-202210:24:23 IST Report Abuse
Chinnappa Pothiraj இவை எப்படி சாத்தியம், நாட்டின் காவல்துறை, உளவுத்துறையை ஏன் மேம்படுத்தவில்லை. பணியாளர்களின் சம்பளம் கணக்கில் கொண்டு பணியாளர்களை அதிகப்படுத்தவில்லை என்ற காரணம் என்றால், தனிநபர், கூலிப்படை, கொள்ளையர்களால் அநீதியால் கொடுமையால் உயிரையும் பொருளையும் இழந்தது இந்தியக் குடிமகனின் உடமையல்லவா? இதெல்லாம் நாட்டின் அமைதிக்கும், சம்மந்தப்பட்ட துறைகளுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் தடைக்கல் அல்லவா? நாட்டின் எல்லையைப் பாதுகாப்பது நாட்டு மக்களுக்காக,அதே சமயத்தில் சக நாட்டு மக்களால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றுவது அரசின் கடமையல்லவா? குற்றமில்லா நாடாக அமைய பொது சேவையில் ஈடுபட்டிருக்கும் அனைத்து இந்தியக்குடிமகனுக்கும் பிற மக்களுக்கு முன்னுதாரணமாக நேர்மை தர்மசிந்தனையுடன் செயல்பட வேண்டும். வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X