தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்: சாலைகள் வெறிச்

Updated : ஜன 16, 2022 | Added : ஜன 16, 2022 | கருத்துகள் (10)
Advertisement
சென்னை: தமிழகத்தில் கோவிட் பரவலை கட்டுப்படுத்த இன்று (ஜனவரி 16ம் தேதி )(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமலானது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.தமிழகத்தில் 'ஒமைக்ரான்' பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தினமும் இரவு நேரங்களில் 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று முழு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில் கோவிட் பரவலை கட்டுப்படுத்த இன்று (ஜனவரி 16ம் தேதி )(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமலானது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
latest tamil news


தமிழகத்தில் 'ஒமைக்ரான்' பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தினமும் இரவு நேரங்களில் 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று முழு ஊரடங்கின் போது காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி-நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் மூடப்பட்டன. 'டாஸ்மாக்' மதுபான கடைகளும் மூடப்பட்டன.

பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரயில்கள் மட்டும் ஓடும். ஓட்டல்களில் பார்சல் சேவை செயல்படும்.

சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை கையில் வைத்திருக்க வேண்டும்.

முழு ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளான பால், பத்திரிகை வினியோகம், பெட்ரோல் நிலையங்கள், மருத்துவம், மருந்தகங்கள், இறுதிச்சடங்கு போன்றவற்றிற்கு அனுமதி உண்டு. பத்திரிகை-ஊடகத்துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் முழு ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்கள் போலீசாரின் வாகன சோதனையின்போது அடையாள அட்டையை காண்பித்து தங்கு தடையின்றி செல்லலாம்.

முழு ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர். சென்னையில் 312 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். முக்கிய மேம்பாலங்கள் தவிர்த்து அனைத்து மேம்பாலங்களும் அடைக்கப்பட்டுள்ளன, போக்குவரத்து சிக்னல்களும் நிறுத்தப்பட்டன.


latest tamil news

வழக்குப்பதிவு

ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஒரு சில இடுங்களில் சாலைகளில் உரிய காரணமின்றி சுற்றித்திரிபவர்களை பிடித்து எச்சரித்த போலீசார், வழக்குப்பதிவு செய்து அனுப்பி வைத்தனர். சில இடங்களில் எச்சரித்து அனுப்பினர். புதுச்சேரியில் இருந்து உரிய காரணம் இன்றி தமிழகம் வருபவர்களை எல்லையில் மறித்து போலீசார் திருப்பி அனுப்பினர்.


போலீசார் எச்சரிக்கை

முழு ஊரடங்கான இன்று தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்களை எந்த காரணத்தை கொண்டும் தடுக்க கூடாது. வாகன சோதனையின்போது வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஏற்கனவே அறிவுரை வழங்கி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
16-ஜன-202217:22:23 IST Report Abuse
DVRR தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்: சாலைகள் வெறிச்???????? அப்போ கீழே உள்ள செய்தியின் அர்த்தம் என்ன 1) சென்னையில் 2,454 தெருக்களில் கோவிட். 2) கோவிட் விதிமீறல் தமிழகத்தில் ரூ.3.45 கோடி அபராதம் வசூல் முன்னுக்குப்பின் முரண்
Rate this:
Cancel
shanan -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜன-202212:49:11 IST Report Abuse
shanan கடைகளுக்கு மட்டும்தான் ஊரடங்கு ஆனால் மக்கள் வழக்கம்போல் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள் இதை கண்டுகொள்ளாத அரசு
Rate this:
16-ஜன-202213:53:10 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்சரி உனக்கு எப்படி தெரிந்தது...
Rate this:
Cancel
shanan -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜன-202212:46:26 IST Report Abuse
shanan கதைகளுக்கு மட்டும்தான் ஊரடங்கு ஆனால் மக்கள் வழக்கம் போல் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் கண்டுகொள்ளாத அரசு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X