மாமியாரை தாக்கிய மருமகன் கைது

Added : ஜன 16, 2022 | |
Advertisement
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த வடசிறுவலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் நாகராஜன், 24; அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சினேகா. இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.திருமணத்திற்குப்பிறகு, சினேகா தனது தாய் வீட்டில் இருந்து வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நாகராஜன், குடிபோதையில்

திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த வடசிறுவலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் நாகராஜன், 24; அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சினேகா. இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.திருமணத்திற்குப்பிறகு, சினேகா தனது தாய் வீட்டில் இருந்து வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நாகராஜன், குடிபோதையில் தனது குழந்தையை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது கணவன், மனைவிக்குமிடையே தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த நாகராஜன், அங்கிருந்த மாமியார் சரிதாவைத் தாக்கி மிரட்டல் விடுத்தார். சரிதா அளித்த புகாரின் பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து நாகராஜனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X