ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்தவர் மோசடி வழக்கில் கைது

Added : ஜன 16, 2022 | கருத்துகள் (14)
Advertisement
கோவில்பட்டி: விருதுநகர் மாவட்டம் ராமுதேவன்பட்டியை சேர்ந்தவர் விஜயநல்லதம்பி. முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரரான இவர், வெம்பக்கோட்டை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளராக பதவி வகித்தார். இவர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ரூ.3 கோடி மோசடி புகார் அளித்தார். இதனடிப்படையில், ராஜேந்திரபாலாஜி கைதாகி சிறை சென்றார். இந்த சூழ்நிலையில், விஜயநல்லதம்பியின் கட்சி பதவி

கோவில்பட்டி: விருதுநகர் மாவட்டம் ராமுதேவன்பட்டியை சேர்ந்தவர் விஜயநல்லதம்பி. முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரரான இவர், வெம்பக்கோட்டை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளராக பதவி வகித்தார். இவர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ரூ.3 கோடி மோசடி புகார் அளித்தார். இதனடிப்படையில், ராஜேந்திரபாலாஜி கைதாகி சிறை சென்றார். இந்த சூழ்நிலையில், விஜயநல்லதம்பியின் கட்சி பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில், ரவீந்திரன் என்பவர், ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி விஜயநல்லதம்பி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்தார். இதனால், அவர் கடந்த 30 நாட்களாக தலைமறைவாக இருந்தார். இன்று(ஜன.,16) கோவில்பட்டி பகுதியில் விஜயநல்லதம்பியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
16-ஜன-202218:02:19 IST Report Abuse
DVRR ராஜேந்திர பாலாஜியை கைது செய்த போலீஸ் லஞ்ச ஊழல் வழக்கில் கைது இப்படி அடுத்த செய்தி வருமா???
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
16-ஜன-202217:30:49 IST Report Abuse
sankaranarayanan ராஜேந்திர பாலாஜியை விடுதலை செய்து நல்ல தம்பியை உள்ளே தள்ளுவீர்களா? பொறுத்து இருந்து பார்ப்போம். கதை தொடரும்
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
16-ஜன-202215:59:08 IST Report Abuse
sankar வல்லவனுக்கு, வலலவனுக்கும் வல்லவன். மீன் கருவாடு என் எப்போதும் பேசிய காளிமுத்துவின் தம்பியாமே. பலே, பலே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X