30 நாளில் கட்டட அனுமதி திட்டம் 3 ஆண்டாகியும் அமலாகவில்லை

Updated : ஜன 16, 2022 | Added : ஜன 16, 2022 | கருத்துகள் (3)
Advertisement
சென்னை : சிறிய வீடுகளுக்கான கட்டட அனுமதி, 30 நாட்களில் வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு, மூன்று ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.1,200 சதுர அடிதமிழகத்தில் கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., மற்றும் நகரமைப்பு துறையான டி.டி.சி.பி., ஆகியவற்றிடம் உள்ளது.இதில், 10 ஆயிரம் சதுர அடி வரையிலான குடியிருப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : சிறிய வீடுகளுக்கான கட்டட அனுமதி, 30 நாட்களில் வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு, மூன்று ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.latest tamil news1,200 சதுர அடி

தமிழகத்தில் கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., மற்றும் நகரமைப்பு துறையான டி.டி.சி.பி., ஆகியவற்றிடம் உள்ளது.

இதில், 10 ஆயிரம் சதுர அடி வரையிலான குடியிருப்பு திட்டங்களுக்கு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே திட்ட அனுமதி வழங்கலாம். இதற்கு குறிப்பிட்ட கால வரம்பு இருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகளில் உரிய காலத்தில் கட்டடஅனுமதி கிடைப்பதில்லை என்று புகார் கூறப்படுகிறது.


latest tamil news


இந்நிலையில், 1,200 சதுர அடி வரையிலான குறைந்த பரப்பளவு குடியிருப்பு திட்டங்களுக்கு, 30 நாட்களுக்குள் கட்டட அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு 2019ல் அறிவித்தது. அது மூன்று ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இது குறித்து, கட்டுமான பொறியாளர்கள் கூறியதாவது:தமிழகத்தில் நடுத்தர, குறைந்த வருவாய் பிரிவினர் பெரும்பாலும், 600 முதல் 1,000 சதுர அடிக்குள் தனி வீடுகள் கட்ட திட்டமிடுகின்றனர்.

இதற்காக, உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பித்தால், ஆறு மாதம் முதல் ஒரு ஆண்டு வரை காத்திருக்க வேண்டியுள்ளது. நில உரிமை தொடர்பான விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பின் தான், இணையதளத்தில் விண்ணப்பம் பதிவு செய்யப்படுகிறது. கணினி மயமாக்கலுக்கு பின், ஒரு வரைபடத்தை ஆய்வு செய்ய 20 நிமிடங்கள் தான் ஆகும்.


தாமதம்

ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரிகளின் மெத்தனத்தால், கட்டட அனுமதி தாமதமாகிறது.எனவே, 30 நாளில் கட்டட அனுமதி என்ற திட்டத்தை செயல்படுத்த, புதிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
16-ஜன-202210:25:11 IST Report Abuse
Kasimani Baskaran கல்லாக்கட்ட வேண்டாமா? கமிசன் வேறு கொடுக்க வேண்டும்...
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஜன-202210:18:30 IST Report Abuse
Lion Drsekar இவைகள் ஒரு செய்திதானே தவிர சட்டம் இல்லை, மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றே உதாரணம்
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
16-ஜன-202210:15:01 IST Report Abuse
Ramesh Sargam பெட்டி நிறைய 'மாமூல்' சி.எம்.டி.ஏ., மற்றும் நகரமைப்பு துறையான டி.டி.சி.பி., இல் பணிபுரியும் அதிகாரிகளுக்கு கொடுத்தால், மூன்று மணி நேரத்திலேயே கட்டடம் கட்ட அனுமதி கிடைக்கும். நிறைய பெட்டிகள் இருந்தால் அவர்களே கட்டியும் தருவார்கள். இது தெரியவில்லையே மக்களுக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X