கோவை மாநகராட்சி தேர்தலில் 'அண்ணாத்தே ஆடுறார்!' வேட்பாளர்களை அறிவித்து கமல் களம்: திராவிட கட்சிகளுக்கு போகுமே பலம்

Added : ஜன 16, 2022 | கருத்துகள் (22)
Advertisement
கோவை: இன்னும் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்காத நிலையில், முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை, மக்கள் நீதி மய்ய தலைவரான கமல் வெளியிட்டிருப்பது, தி.மு.க., - அ.தி.மு.க.,வினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. சட்டசபை தேர்தலில் கமல் கட்சி காரணமாகவே, 10 தொகுதிகளையும் இழந்ததால், தி.மு.க.,வினர் 'அப்செட்'டாகி இருக்கின்றனர்.கோவையில் தி.மு.க., - அ.தி.மு.க.,வை விரும்பாத வாக்காளர்கள், நாம் தமிழர்
கோவை மாநகராட்சி, தேர்தல், அண்ணாத்தே ஆடுறார், வேட்பாளர்கள், கமல், களம்,  திராவிட கட்சிகள்,பலம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: இன்னும் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்காத நிலையில், முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை, மக்கள் நீதி மய்ய தலைவரான கமல் வெளியிட்டிருப்பது, தி.மு.க., - அ.தி.மு.க.,வினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. சட்டசபை தேர்தலில் கமல் கட்சி காரணமாகவே, 10 தொகுதிகளையும் இழந்ததால், தி.மு.க.,வினர் 'அப்செட்'டாகி இருக்கின்றனர்.

கோவையில் தி.மு.க., - அ.தி.மு.க.,வை விரும்பாத வாக்காளர்கள், நாம் தமிழர் மற்றும் கமல் நடத்தும் ம.நீ.ம., கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்கின்றனர். கடந்த சட்டசபை தேர்தலில், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கோவை தெற்கு, வடக்கு, சிங்காநல்லுார் தொகுதிகளில் மட்டும், கமல் கட்சி வேட்பாளர்கள், 2 லட்சம் ஓட்டுகள் பெற்றனர். கோவை மாவட்டத்தில் ம.நீ.ம., பெற்ற ஓட்டுகளே, தி.மு.க., ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாததற்கு காரணமாக இருந்தது.

தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு பின், தேதி அறிவிப்பு வெளியாகலாம்; பிப்., இறுதியில் தேர்தல் நடத்த வாய்ப்பிருப்பதாக, தேர்தல் பிரிவினர் கூறுகின்றனர். தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள், வேட்பாளராக போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனு பெற்றிருக்கின்றன. வார்டு வாரியாக பூத் கமிட்டிகள் உருவாக்கியுள்ளன.மேயர், துணை மேயர், மண்டல தலைவர், நிலைக்குழு தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கு, ஆளும்கட்சியான தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் இப்போதே காய் நகர்த்தி வருகின்றனர்.


latest tamil news


இச்சூழலில், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாக, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் வெளியிட்டிருக்கிறார். மாநகராட்சியின் 100 வார்டுகளில், 47 வார்டுகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார், இதில், 25 பேர் பெண்கள்.சட்டசபை தேர்தல் தோல்வியாலும், சினிமாவில் நடிப்பதற்கு கமல் சென்றிருப்பதாலும், ம.நீ.மய்யத்தினர் ஒதுங்கி விடுவார்கள் என, இரு திராவிட கட்சியினரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, 47 வேட்பாளர்களை களமிறக்கி இருப்பது, திராவிடக் sகட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இவர்களால் ஓட்டுகள் பிரியும்; கமல் பிரசாரத்துக்கு வந்தால், வெற்றியை பாதிக்கும் என்பதால், கலக்கத்தில் இருக்கின்றனர்.


பிரசாரத்துக்கு கமல் வருவார்!


மக்கள் நீதி மய்ய மாநில செயலாளர் முரளி அப்பாஸ் கூறுகையில், ''மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்பவர்களாக கட்சியினர் இருக்க வேண்டும். நேர்மை தவறாமல் இருக்க வேண்டும். அத்தகையவர்களை தேர்வு செய்து, வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த கட்ட பட்டியல் பின்னர் வெளியாகும். தேர்தல் பிரசாரத்துக்கு கமல் வருவார்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barakat Ali - Medan,இந்தோனேசியா
16-ஜன-202220:03:13 IST Report Abuse
Barakat Ali இவர் தனது வேட்பாளர்களை நிறுத்துவதால் பிஜேபிக்கு எதிர் வாக்குகள் பிரியும் அதனால் பிஜேபிக்குத்தான் ஆதாயம் ஆண்டவரின் கட்சிக்கு மீண்டும் பிஜேபியின் பி டீம் என்கிற பெயர் கிடைக்கும்
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
16-ஜன-202218:14:11 IST Report Abuse
Samathuvan அந்த ஒரு நிமிடத்துல நீங்கள், நாங்களும் சங்கி கட்சியோட ஒரு பிரிவுன்னு காசு வாங்கிகிட்டு கப் சிப் போனீங்க பாருங்க. அப்போதான் தெரிஞ்சுது உண்மையில நீங்க பிக் பாசுன்னு.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
16-ஜன-202215:32:55 IST Report Abuse
sankaseshan கால் காஸுக்கு பிரயோஜனம் இல்லாதவன் காம ஹாசன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X