வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 2.68 லட்சம் பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2.71 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,71,202 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,71,22,164 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,38,381 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,50,85,721 ஆனது. தற்போது 15,50,377 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவிட் காரணமாக 314 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,86,066 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 156.76 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 66,21,395 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 7,743 ஆக உயர்ந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE