ஜெர்மனியின் கீல் என்னும் பகுதியில் இருந்து ஒரு நீர்மூழ்கி கப்பல் புறப்பட்டது. அது 1943 ஆம் ஆண்டு. அந்த கப்பலில் தனது நண்பரோடு புறப்பட்டார் நேதாஜி. அட்லாண்டிக் கடலில் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தது.
இங்கிலாந்து கடல் வழி போக்குவரத்தை இந்த சமயத்தில் மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தது. அந்த நேரத்தில்தான் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருந்தார் நேதாஜி. திரைப்படத்தில் வருவது போல திக்..திக்.. நிமிடங்கள். அந்த பயணத்தின் போது எதிரிகளுக்கு நடுவே அந்த நீர்மூழ்கிக் கப்பல் தவறுதலாக சென்றுவிட்டது. இந்த தகவலை கப்பல் கேப்டன் அறிவித்தார்.
அமெரிக்க கப்பல் படையை சேர்ந்த கப்பல்கள் இங்கிலாந்தை நோக்கி சென்று கொண்டிருந்தன. இந்தக் கப்பல்களுக்கு நடுவேதான் நேதாஜி சென்ற ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பல் மாட்டிக்கொண்டது.
அனைவரும் தளபதியின் அறிவிப்பைக் கேட்டவுடன் பயந்து போனார்கள். அப்போது நேதாஜி தனது உதவியாளரிடம் இந்தியப் படை அமைப்பது குறித்து குறிப்புகள் சொல்லிக் கொண்டிருந்தார்.
குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்த அந்த உதவியாளரின் கை நடுங்கத் தொடங்கியது. ஆனால், நேதாஜி சற்றும் கலங்காமல் தனது திட்டங்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். எத்தனை அழுத்தமான மன உறுதி?
(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார், மாநில செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்)
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE