கோவிட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு வலு சேர்த்த தடுப்பூசி இயக்கம்: பிரதமர் மோடி

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 16, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: கோவிட் பெருந்தொற்றிற்கு எதிரான போராட்டத்திற்கு தடுப்பூசி இயக்கம் மிகப்பெரும் வலிமை அளித்தது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கோவிட் தடுப்பூசி இயக்கம் துவங்கி இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது. சென்ற ஆண்டு இதே நாளில் (ஜன.,16) பிரதமர் மோடி கோவிட் தடுப்பூசி இயக்கத்தை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக துவக்கி வைத்தார்.இந்நிலையில் பிரதமர் மோடி
தடுப்பூசி, பிரதமர் மோடி, நரேந்திர மோடி, பிரதமர்நரேந்திர மோடி, இந்தியா, கோவிட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கோவிட் பெருந்தொற்றிற்கு எதிரான போராட்டத்திற்கு தடுப்பூசி இயக்கம் மிகப்பெரும் வலிமை அளித்தது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி இயக்கம் துவங்கி இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது. சென்ற ஆண்டு இதே நாளில் (ஜன.,16) பிரதமர் மோடி கோவிட் தடுப்பூசி இயக்கத்தை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக துவக்கி வைத்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தடுப்பூசி இயக்கம் துவங்கி இன்று(ஜன.,16) ஓராண்டு நிறைவு பெறுகிறது. தடுப்பூசி இயக்கத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன். கோவிட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு, நமது தடுப்பூசி இயக்கம் பெரிய பலத்தை கொடுத்ததுடன், மக்களின் வாழ்க்கையை பாதுகாத்தது. இதன் மூலம் பலரின் வாழ்வாதாரத்திற்கு பாதுகாப்பு கிடைத்தது.


latest tamil news


அதேநேரத்தில், நமது டாக்டர்கள், நர்சுகள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பங்கு மகத்தானது. தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி போடும் காட்சிகளை பார்க்கும் போது அல்லது அங்கு நமது சுகாதார பணியாளர்கள் தடுப்பூசிகளை எடுத்து செல்லும் காட்சிகளை பார்க்கும் போது நமது மனமும், இதயமும் பெருமிதம் கொள்கிறது.

கோவிட்டிற்கு எதிரான போராட்டத்தை இந்தியா எப்போதும் அறிவியல்பூர்வமாகவே அணுகும். நமது குடிமக்கள் சரியான சிகிச்சை பெறுவதற்காக சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறோம். கோவிட் தடுப்பு தொடர்பான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இந்த பெருந்தொற்றில் இருந்து வெளியே வருவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
16-ஜன-202217:31:02 IST Report Abuse
வெகுளி கோவிட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு வலு சேர்த்தது பிரதமரின் தடுப்பூசி இயக்கம்.... கோவிட்டிற்கு ஆதரவான நிலைக்கு வலு சேர்த்தது திராவிட பூஞ்சைகளின் ஊசித்தடுப்பு இயக்கம்.... கம்பி கட்டின கதையெல்லாம் சொல்லி பாமர மக்களிடம் புரளி பரப்பினர் கூலிபான்ஸ்...
Rate this:
Cancel
16-ஜன-202217:04:02 IST Report Abuse
ஆரூர் ரங் இதுவே முந்தைய ஆட்சியாக இருந்தால் நாட்டின் சொத்துக்க‌ள்🤕 எல்லாவற்றையும் அன்னிய மருந்து கம்பெனிகளிடம் அடகு வைதது தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்து இப்போது பூஸ்டர்டோஸுக்கு நம் மானத்தையும்😡 விற்றிருப்பார்கள்..உள்நாட்டு மருந்து நிறுவனங்களின் மேல் முழு நம்பிக்கை வைத்து இறக்குமதிக்கு தடா போட்டு குறைந்த கால அளவில் அனைவருக்கும் இலவச உள்நாட்டு தடுப்பூசி உலகில் வேறெங்கும் நடத்தப்படாத அதிசயம். நம் வாழ்வில் மீண்டும் விளக்கேற்றியதற்காக மீண்டும் 👏👏கைதட்டலாம்
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
16-ஜன-202213:48:38 IST Report Abuse
Dhurvesh ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X