குன்னுார் : குன்னுார் உபாசி அருகே கோத்தகிரி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில், 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பூங்காக்கள் உட்பட சுற்றுலா மையங்கள் மாலை 3:00 மணிக்கு பூட்டப்படுகிறது. அதே நேரத்தில் சுற்றுலா தொழில் பாதிக்காமல் இருக்க ஓட்டல்கள், லாட்ஜ்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குன்னுார் உபாசி அருகே, கோத்தகிரி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில், மேலாளர் ஒருவருக்கு தொற்று உறுதியானது. தொடர்ந்து ஊழியர்கள், பணியாளர்களுக்கு பரிசோதனை செய்ததில், 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து, கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஓட்டல் இயங்கி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE