பிரிட்டன் பிரதமராகிறார் ரிஷி சுனக்?| Dinamalar

பிரிட்டன் பிரதமராகிறார் ரிஷி சுனக்?

Added : ஜன 16, 2022 | கருத்துகள் (13) | |
லண்டன்: மது விருந்து நடத்தி சர்ச்சையில் சிக்கியுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை, சொந்த கட்சியினரே பதவி விலகும்படி வலியுறுத்தி வருகின்றனர். அவர் பதவி விலகினால் அடுத்த பிரதமராக பொறுப்பேற்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதில் நிதி அமைச்சராக உள்ள ரிஷி சுனக்கின் பெயர் முதலில் அடிபடுகிறது. இந்திய வம்சாவளியான இவர், ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு
பிரிட்டன் பிரதமராகிறார் ரிஷி சுனக்?

லண்டன்: மது விருந்து நடத்தி சர்ச்சையில் சிக்கியுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை, சொந்த கட்சியினரே பதவி விலகும்படி வலியுறுத்தி வருகின்றனர். அவர் பதவி விலகினால் அடுத்த பிரதமராக பொறுப்பேற்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதில் நிதி அமைச்சராக உள்ள ரிஷி சுனக்கின் பெயர் முதலில் அடிபடுகிறது. இந்திய வம்சாவளியான இவர், ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றார். இவர், 'இன்போசிஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2015ல் எம்.பி.,யாக முதன்முறையாக பிரிட்டன் பார்லிமென்ட்டிற்கு தேர்வான இவர், 2020 பிப்ரவரியில் அந்த நாட்டின் நிதி அமைச்சரானார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X