வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களுக்காக ரூ.3.45 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கோவிட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஊரடங்கின் போது அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 7 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை தமிழகம் முழுவதும் இரவு மற்றும் ஞாயிறு ஊரடங்கின் போது, முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது போன்ற காரணங்களுக்காக ரூ.3.45 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதில், முகக்கவசம் அணியாததால் 1,64,323 பேரிடமும், சமூக இடைவெளியை பின்பற்றாததால் 1,910 பேரிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறியதாக 245 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் 43,417 பேரிடம் ரூ.88 லட்சம் அபராதம் வசூலானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE