நாமக்கல்: திருட்டு வழக்கில் கைதான மாற்றுத்திறனாளி இறந்தது தொடர்பாக 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சியில் பிட்டராக வேலைபார்க்கும் பெரியசாமி(53) என்பவரது வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார்(35), உடந்தையாக இருந்ததாக நகைக்கடை உரிமையாளர் மதிவாணன், சேலம் கருப்பூரை சேர்ந்த பிரபாகரன், இவரது மனைவி கம்சலா ஆகியோரை கைது செய்து 9 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் பிரபாகரன், கை கால் செயல்படாத மாற்றுத்திறனாளி.
உடல்நலக்குறைவு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரபாகரன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால், போலீசார் தாக்கியதால் தான் பிரபாகரன் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சேந்தமங்கலம் எஸ்ஐ சந்திரன், புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் பூங்கொடி, நல்லிபாளையம் போலீஸ் ஏட்டு குழந்தைவேல் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி., நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement