கற் சித்திரங்களல்ல பேசும் பொற்சித்திரங்கள்

Updated : ஜன 16, 2022 | Added : ஜன 16, 2022 | கருத்துகள் (1)
Advertisement
சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் கும்பாபிசேகம் வருகின்ற 23 ந்தேதி நடைபெற உள்ளதுஉஇதற்காக கோயிலில் பல வரவேற்கதக்க பல பணிகள் நடந்தள்ளன,அவற்றில் ஒன்றுதான் மூலவர் முன் உள்ள தேவர் மண்டபத்தில் உருவாக்கப்பட்டுள்ள முருகப்பெருமானின் சிற்பங்கள் கந்தன்,ஆறுமுகம்,சக்திபாலன்,சண்முகம்,சரவணன்,சுப்பிரமணியன்,கார்த்திகேயன்,தண்டபாணி என்று நாம் வணங்கும் முருகப்பெருமானைப்பற்றி

சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் கும்பாபிசேகம் வருகின்ற 23 ந்தேதி நடைபெற உள்ளதுஉஇதற்காக கோயிலில் பல வரவேற்கதக்க பல பணிகள் நடந்தள்ளன,அவற்றில் ஒன்றுதான் மூலவர் முன் உள்ள தேவர் மண்டபத்தில் உருவாக்கப்பட்டுள்ள முருகப்பெருமானின் சிற்பங்கள்latest tamil news


கந்தன்,ஆறுமுகம்,சக்திபாலன்,சண்முகம்,சரவணன்,சுப்பிரமணியன்,கார்த்திகேயன்,தண்டபாணி என்று நாம் வணங்கும் முருகப்பெருமானைப்பற்றி நமக்கு தெரிந்தது சில பெயர்கள்தான் ஆனால் அவருக்கு 125ற்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன அவரது வரலாற்றைச் சொல்லும் கந்த புராணத்தை படித்தால் அந்தப் பெயர்களைத் தெரிந்து கொள்ளலாம்.


latest tamil news


அதில் சில பெயர்களையும் அதற்கான காரணத்தையும் தேவர் மண்டப துாண்களில் பொறித்துள்ளனர்.இது நாள் வரை மீதமான விபூதி,குங்குமத்தை கொட்டும் இடமாக ,சும்மாயிருந்த அந்த துாண்கள் இப்போது முருகனின் பல்வேறு பெயர் பேசும் கற்சிற்பங்களாக அல்ல பொற்சிற்பங்களாகியுள்ளன.


latest tamil news


Advertisement

கங்கை நதிக்கு ஒப்பான சரவணப் பொய்கையில் வளர்ந்தவராதலால் காங்கேய மூர்த்தி என்றும்,சூரபத்மன் வம்சத்தில் வந்த தாரகாரன் என்ற அரக்கனை வதம் செய்தவர் என்பதால் தாரகாரமூர்த்தி என்றும்,சூரபத்மனை வதம் செய்ய தேவர்கள் ஒன்றிணைந்து முருகனை தலைவராக தேர்ந்து எடுத்த போது இந்திரனே தலைவராக இருக்கட்டும் நான் அவருக்கு சேனாதிபதியாக இருந்து வெற்றியை ஈட்டித்தருகிறேன் என்றாதனால் சேனான்யன் என்றும்,சூரபத்மனின் வதத்தின் போது வீரபாகு உள்ளீட்ட சேனைத் தலைவர்களுக்கு தலைவனாக இருந்தவர் என்பதால் தேவசேனாதிபதி என்றும்,முருகப் பெருமானுக்கு இந்திரன் பரிசாக வழங்கியது ஒரு மயில் ,சூரபத்மனை வதம் செய்தபிறகு அவனது விருப்பத்தின் பேரில் சூரபத்மனை மயிலாக மாற்றி அதனையே தனது வாகனமாகவும் வைத்துக் கொண்டவர் இப்படி மயிலோடு நெருக்கமான முருகனை மயிலின் மற்றொரு பெயரான சிகி என்ற பெயரைக் கொண்டு சிகிவாகணன் என்றும்,சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட அக்னியை தாங்கியவர் என்பதால் அக்னி ஜாதாயன் என்றும்,சூரியனின் வெப்பத்திற்கும் மேலான சக்தி கொண்டு அசுரர்களை அழித்தவர் என்பதால் செளரபேயன் என்றும் அவருக்கு பல பெயர்கள் உள்ளன.


latest tamil news


அந்தப் பெயருக்கு உள்ள முருகன் எப்படி இருப்பார் என்பதை கந்த புராணத்தின் துணை கொண்டு சிற்பி நேர்த்தியாக வடித்துள்ளார் வெறும் சிற்பமாக இருக்கக்கூடாது என்பதற்காக அந்த சிற்பத்தின் தன்மை குறித்து கல்வெட்டாகவும் பொறித்துள்ளனர் ஆகவேதான் இது கற்சிற்பங்கள் அல்ல பேசும் பொற்சிற்பங்கள்.


latest tamil newslatest tamil newslatest tamil news-எல்.முருகராஜ்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
17-ஜன-202201:59:58 IST Report Abuse
Sai சிகி வாகனன் என்பதயே சரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X