வாழ்நாளில் 29 குட்டிகளை ஈன்ற 'சூப்பர் மாம்' புலி விடைப்பெற்றது!

Updated : ஜன 16, 2022 | Added : ஜன 16, 2022 | கருத்துகள் (2)
Advertisement
போபால்: மத்திய பிரதேசத்தின் பென்ச் புலிகள் காப்பகத்தில் தனது வாழ்நாளில் 29 குட்டிகள் போட்டு 'சூப்பர் மாம்' என்று புகழப்பட்ட காலர்வாலி எனும் பெயர்கொண்ட புலி வயது மூப்பினால் இறந்தது.பல்லுயிர்ச்சூழல் நிறைந்த காட்டில் மட்டுமே புலிகள் இருக்கும். ஒரு காட்டில் புலியின் நடமாட்டம் உள்ளது என்றால் அக்காட்டின் ஆரோக்கியம் சீராக உள்ளது என பொருள். ஒரு காலத்தில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

போபால்: மத்திய பிரதேசத்தின் பென்ச் புலிகள் காப்பகத்தில் தனது வாழ்நாளில் 29 குட்டிகள் போட்டு 'சூப்பர் மாம்' என்று புகழப்பட்ட காலர்வாலி எனும் பெயர்கொண்ட புலி வயது மூப்பினால் இறந்தது.



latest tamil news




பல்லுயிர்ச்சூழல் நிறைந்த காட்டில் மட்டுமே புலிகள் இருக்கும். ஒரு காட்டில் புலியின் நடமாட்டம் உள்ளது என்றால் அக்காட்டின் ஆரோக்கியம் சீராக உள்ளது என பொருள். ஒரு காலத்தில் உலகளவிலான புலிகள் எண்ணிக்கையில் 80 சதவீதம் இந்தியாவில் தான் இருந்தது. வேட்டை, காடுகள் அழிப்பினால் அதன் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவுக்கு குறைந்தது. 1973ல் 'புராஜக்ட் டைகர்' புலிகள் வேட்டை தடை செய்யப்பட்டு, அவற்றுக்கான வனக் காப்பகங்கள் உருவாக்கப்பட்டன. அதனால் அந்த சொற்ப எண்ணிக்கை காப்பாற்றப்பட்டு தற்போது சுமார் 3 ஆயிரம் புலிகள் இந்தியாவில் உள்ளன.

அதிலும் மத்திய பிரதேசம் 526 புலிகளுடன் நாட்டின் புலி மாநிலம் என 2018ல் விருது பெற்றது. அங்குள்ள பெஞ்ச் புலிகள் காப்பகத்தில் வாழ்ந்த காலர்வாலி எனும் 17 வயது புலி நேற்று (ஜன., 15) இறந்தது. 2005 செப்டம்பரில் டி-7 எனும் புலி ஈன்ற 4 குட்டிகளில் ஒன்று தான் இந்த காலர்வாலி. 2008 முதல் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க அதன் கழுத்தில் ரேடியோ காலர் கட்டப்பட்டது. நீண்ட ஆண்டுகள் அதனுடன் இருந்ததால் அதனை காலர்வாலி என அழைக்கத் தொடங்கினர்.


latest tamil news




இப்புலி 2008 முதல் 2018 வரை 29 குட்டிகளை ஈன்று சாதனைப்படைத்துள்ளது. முதன்முதலில் மே 2008ல் 3 குட்டிகள் போட்டது. அவற்றில் எதுவும் பிழைக்கவில்லை. 2010ல் அரிதாக ஐந்து குட்டிகளை பெற்றது. கடைசியாக 2018ல் நான்கு குட்டிகளைப் போட்டது. இப்புலி பெற்ற 29 குட்டிகளில் 25 உயிருடன் உள்ளன. புலியின் சராசரி வாழ்நாள் 12 ஆண்டுகள். இப்புலி 17 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஜன-202210:39:21 IST Report Abuse
kulandai kannan 29 குட்டிகளைப் பெற்றதற்கு, ஆண் புலிகளையும் பாராட்டத்தானே வேண்டும். ஹிஹி
Rate this:
Cancel
K.SANTHANAM - NAMAKKAL,இந்தியா
17-ஜன-202202:23:39 IST Report Abuse
K.SANTHANAM புலியின் சாதனை பாராட்டத்தக்கது. அதன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X