விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்கிறது!இரு மாவட்டங்களில் பெரும் பாதிப்பு

Added : ஜன 16, 2022
Advertisement
சோமனுார்:கோவை, திருப்பூர் மாவட்டத்தில் எட்டாவது நாளாக விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்கிறது. இதனால், இரு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன. இவற்றில், 95 சதவீத விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன.மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, புதிய கூலி ஒப்பந்தம்
 விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்கிறது!இரு மாவட்டங்களில் பெரும் பாதிப்பு

சோமனுார்:கோவை, திருப்பூர் மாவட்டத்தில் எட்டாவது நாளாக விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்கிறது. இதனால், இரு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன. இவற்றில், 95 சதவீத விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, புதிய கூலி ஒப்பந்தம் போடப்படும். ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளாக புதிய கூலி பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.கூலி உயர்வு கேட்டு கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர், இரு மாவட்ட கலெக்டர்களிடம் மனுக்கள் அளித்தனர். கடந்த நவம்பரில் அமைச்சர்கள் முன்னிலையில் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.ஆனால், டிச., 1 முதல் அமல்படுத்த வேண்டிய புதிய கூலி உயர்வை, ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கவில்லை. இதையடுத்து விசைத்தறி கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை செய்து, கடந்த, 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கினர். இதனால், இரு மாவட்டங்களிலும், விசைத்தறிகள் முடங்கியுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.
இதற்கிடையில், நேற்று முன் தினம், கூட்டுக்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சோமனுார் சங்க தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. பல்லடம் தலைவர் வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், வரும், 20ம் தேதி கோவையில் நடக்கும் பேச்சுவார்த்தையில், சோமனுார் ரகத்துக்கு 23 சதவீதமும்; பல்லடம் ரகத்துக்கு 20 சதவீதமும் கூலி உயர்வு வழங்க உத்தரவிடவேண்டும்.பேச்சுவார்த்தைக்கு, சோமனுார், பல்லடம், அவிநாசி, திருப்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் தவறாது கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிடவேண்டும்.கலந்து கொள்ளாத ஜவுளி உற்பத்தியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடன்பாடு ஏற்படவில்லை என்றால், வேலை நிறுத்த போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், 'கடந்த, எட்டு நாட்களாக விசைத்தறி வேலை நிறுத்தம் நடக்கிறது. இடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
விசைத்தறி வேலை நிறுத்தத்தால், உரிமையாளர்கள், தொழிலாளர்கள், மறைமுகமாக பயன்பெறும் தொழிலாளர்கள் என, லட்சக்கணக்கானோர் பாதிக்கப் பட்டுள்ளோம். விசைத்தறி ஜவுளி தொழிலின் நலன் கருதி, புதிய கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க முன் வரவேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X