முழு ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு

Added : ஜன 16, 2022
Advertisement
மேட்டுப்பாளையம்:தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கிற்கு ஆதரவளிக்கும் விதமாக, பொதுமக்கள் நடமாட்டம் இன்றி ஊரகப்பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசு, ஊரங்கு அறிவித்துள்ளது.வெள்ளி சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் வழிபாட்டுத்தலங்கள் அடைக்கப்பட்டிருக்கும் எனவும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு
 முழு ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு

மேட்டுப்பாளையம்:தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கிற்கு ஆதரவளிக்கும் விதமாக, பொதுமக்கள் நடமாட்டம் இன்றி ஊரகப்பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசு, ஊரங்கு அறிவித்துள்ளது.வெள்ளி சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் வழிபாட்டுத்தலங்கள் அடைக்கப்பட்டிருக்கும் எனவும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை, அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அரசின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பொதுமக்களின் நடமாட்டமும் குறைவாக இருந்தது. ஒரு சிலர் மட்டுமே மருத்துவமனைக்கும், மருந்து கடைகளுக்கும் சென்று வந்தனர். காரமடை சிறுமுகை ஆகிய பகுதிகளிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மேட்டுப்பாளையம், காரமடை நகர சாலைகள் எவ்வித வாகனங்களும் செல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அத்துமீறி சுற்றிய சிலரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X