தைப்பூசம்: காவடிகளுடன் பக்தர்கள் பாதயாத்திரை

Added : ஜன 16, 2022
Advertisement
சூலுார்:தைப்பூசத்தை முன்னிட்டு, முருக பக்தர்கள், காவடி எடுத்துக் கொண்டு, பழநி உள்ளிட்ட மலைக்கோவில்களுக்கு பாதயாத்திரையை தொடங்கியுள்ளனர்.முருகன் கோவில்களில், நாளை, தைப்பூச திருவிழா நடக்கிறது. இதையொட்டி, சூலுார், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முருக பக்தர்கள் காவடி, எடுத்து பழநி, சென்னிமலை, சிவன்மலை, மருதமலை உள்ளிட்ட முருகன் கோவில்களுக்கு பாதயாத்திரை
தைப்பூசம்: காவடிகளுடன் பக்தர்கள் பாதயாத்திரை

சூலுார்:தைப்பூசத்தை முன்னிட்டு, முருக பக்தர்கள், காவடி எடுத்துக் கொண்டு, பழநி உள்ளிட்ட மலைக்கோவில்களுக்கு பாதயாத்திரையை தொடங்கியுள்ளனர்.முருகன் கோவில்களில், நாளை, தைப்பூச திருவிழா நடக்கிறது. இதையொட்டி, சூலுார், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முருக பக்தர்கள் காவடி, எடுத்து பழநி, சென்னிமலை, சிவன்மலை, மருதமலை உள்ளிட்ட முருகன் கோவில்களுக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.சோமனுார் அடுத்த தொட்டிபாளையத்தில் இருந்து, 50க்கும் மேற்பட்ட காவடிகள் எடுத்துக்கொண்டு, ஆண்கள், பெண்கள் என, 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழநிக்கு பாத யாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்,' தைப்பூசம் வரை கோவில்களில் வழிபட பக்தர்களுக்கு அனுமதியில்லை என, அரசு அறிவித்துள்ளது வேதனையளிக்கிறது. தைப்பூச நேர்த்திக்கடனை செலுத்த காவடிகளுடன் பழநிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்தாண்டும் பாதயாத்திரை புறப்பட்டு விட்டோம். எப்படியாவது நேர்த்திக்கடனை செலுத்தி முருகப்பெருமானை வழிபட்டு வருவோம்' என்றனர். பழநி மட்டுமின்றி, அருகிலுள்ள மலைக்கோவில்களுக்கும் பக்தர்கள் காவடி எடுத்துச் செல்கின்றனர்.படவிளக்கம்: சோமனுார் அடுத்த செட்டிபாளையத்தில் இருந்து, பழநிக்கு காவடியுடன் பாதயாத்திரை சென்ற பக்தர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X