பொங்கல் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் :கிராமங்களில் பொங்கல் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

Added : ஜன 16, 2022 | |
Advertisement
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை, விவசாயிகள், பல்வேறு அமைப்பினர், காவல்துறையினர் உற்சாகமாகக் கொண்டாடினர். பொங்கல் விழாவை முன்னிட்டு, சில அமைப்புகள் சார்பில், போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.அன்னுார்* நேரு யுவகேந்திரா மற்றும் நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 39வது ஆண்டு பொங்கல் விழா வடக்கலுாரில் நடந்தது . 14ம் தேதி விளையாட்டு விழா நடந்தது. நேரு யுவகேந்திரா
 பொங்கல் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் :கிராமங்களில் பொங்கல் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை, விவசாயிகள், பல்வேறு அமைப்பினர், காவல்துறையினர் உற்சாகமாகக் கொண்டாடினர். பொங்கல் விழாவை முன்னிட்டு, சில அமைப்புகள் சார்பில், போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.அன்னுார்* நேரு யுவகேந்திரா மற்றும் நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 39வது ஆண்டு பொங்கல் விழா வடக்கலுாரில் நடந்தது . 14ம் தேதி விளையாட்டு விழா நடந்தது.

நேரு யுவகேந்திரா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் பேசுகையில், "இளைஞர்களிடம் சமுதாய சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஊக்கப்படுத்தி, இளைஞர்களை நல்வழிப்படுத்த நேரு யுவகேந்திரா பல்வேறு பணிகள் செய்து வருகிறது" என்றார்.விளையாட்டுப் போட்டிகளும், பூப்பறிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. ஊராட்சி தலைவர் ராஜ்குமார், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.* அன்னுார், உப்புத்தோட்டம் பகுதியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடந்தன.

கோலப் போட்டியில் 120 பெண்கள் பங்கேற்றனர்.சிறுவர், சிறுமியருக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தன. சிறப்பான கோலங்களுக்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் சவுந்தரராஜன் பரிசு வழங்கினார். வாலிபர் சங்க தலைவர் மனோஜ், செயலாளர் பாலசுப்பிரமணி, மா.கம்யூ ஒன்றிய குழு உறுப்பினர் சுகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.* அக்கரைசெங்கப்பள்ளி ஊராட்சியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, துாய்மை பணியாளர்களுக்கு, வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், பா.ஜ., ஒன்றிய செயலாளர் பானு ரமேஷ் பொங்கல் பரிசு வழங்கினார்.

வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய தலைவர் திருமூர்த்தி, பொதுச் செயலாளர்கள் நந்தகுமார், ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.சூலுார்* சூலுார் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், போலீசார் சமத்துவ பொங்கல் வைத்து, கொண்டாடினர்.* தி.மு.க., சார்பில், சூலுாரில் நடந்த விழாவில், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் கும்மியடித்து குலவை சப்தம் எழுப்பி பொங்கல் விழா கொண்டாடினர். மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் மன்னவன் மற்றும் நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கண்ணம்பாளையத்தில் நடந்த விழாவில், ராமகிருஷ்ண ஆசிரமத்தில் சிறுவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தி.மு.க., தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தளபதி முருகேசன், நகர பொறுப்பாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பள்ளபாளையம் ராமகிருஷ்ண ஆசிரமத்தில், மாடுகளை குளிப்பாட்டி, பொட்டிட்டு, மாலை அணிவித்து பொங்கல் வைத்து வழிபாடுகள் நடந்தது. ஆசிரம நிர்வாகிகள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.* முத்துக்கவுண்டன்புதுார் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில் நடந்த விழாவில், ஏராளமானோர் குடும்பத்துடன் பலர் பங்கேற்று, பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர்.பெ.நா.பாளையம்
சின்னதடாகம் அருகே தென்றல் நகர் பகுதியில் வெண்புறா இளைஞர் மன்றம் சார்பில், 20ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் சிறுவர், சிறுமியர் இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.* ஒன்னிபாளையம் கோமாளி ரங்கன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வணங்கினர். கால்நடை வழிபாட்டுக்கு இக்கோவில் புகழ்பெற்றது.பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் நோய்களால் பாதிக்கப்பட்டால், கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் தீர வேண்டும் என, கோமாளி ரங்கனை வேண்டிக் கொள்வர். குறை தீர்ந்ததும், கால்நடைகளை போன்ற உருவாரம் செய்து, நேர்த்திக்கடனாக செலுத்துவது வழக்கம்.
நடப்பாண்டு, மாட்டுப்பொங்கல், தொற்று பரவல் காரணமாக, எளிமையாக நடத்தப்பட்டது. காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்கார பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து, குருக்கம்பாளையம் பஜனை குழுவினரின் பஜனை நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.* ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வேளாண்மை கல்லுாரியில் உள்ள விவசாய மாட்டுப் பண்ணையில் நடந்த விழாவில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பட்டிப்பொங்கல் எனப்படும் பன்னீர், குங்குமம், பால், தயிர், மஞ்சள், கோமியம் உள்ளிட்ட ஒன்பது வகையான வாசனை திரவியங்கள் நிரப்பிய பாத்தியில், அலங்கரிக்கப்பட்ட பசுக்களையும், காளைகளையும் மன்னம் மிதிக்க வைத்தனர்.
வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் மாடுகளுக்கு பொங்கல் மற்றும் அகத்திக்கீரை ஊட்டினார். நிகழ்ச்சியில், வித்யாலயா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், பண்ணைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.* பன்னீர்மடையில் உள்ள கிருஷ்ணசாமி திருக்கோவிலும், மாடுகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதே போல துடியலுார், சின்னதடாகம் உள்ளிட்ட வட்டாரங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர், தங்களுடைய கால்நடைகளை துாய்மைப்படுத்தி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி வணங்கி, வழிபட்டனர். -நமது நிருபர் குழு-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X