சென்னை--பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டதாக, மூன்று சார் - பதிவாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
தென்சென்னை பதிவு மாவட்டம், தாம்பரத்தில் சார் - பதிவாளராக இருப்பவர் வெங்கடசுப்ரமணியன். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள, 10 ஏக்கர் நிலத்தை பதிவு செய்ய வந்த ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவரிடம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது.காஞ்சிபுரம் மாவட் டம், ஸ்ரீபெரும்புதுாரில் சார் - பதிவாளராக இருப்பவர் ஹரிநாத். இவர் அப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட நிலத்தை பத்திரப்பதிவு செய்ய, 12 லட்சம் ரூபாய் கேட்டதாக புகார் கூறப்பட்டது.
இதே போன்று, அரியலுார் மாவட்டம் மீன்சுருட்டியில், சார் - பதிவாளராக இருப்பவர் வேதியம்மாள், சில நபர்களுக்கு ஆதரவாக, அங்கீகாரமில்லாத மனைகளை பதிவு செய்து கொடுத்ததாக புகார் எழுந்தது.இப்புகார்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட டி.ஐ.ஜி.,க்கள் விசாரணை மேற்கொண்டு, மூவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE