11 ஆடுகளை கொன்ற சிறுத்தைகளால் அச்சம்

Added : ஜன 16, 2022
Advertisement
குடியாத்தம்-குடியாத்தம் அருகே, 11 ஆடுகளை சிறுத்தைகள் கடித்து கொன்றதால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொலத்தான்பட்டியைச் சேர்ந்தவர் இருசப்பன், 45; விவசாயி. இவர், தன் ஆடுகளை ஆட்டுப்பட்டியில் கட்டி வைத்திருந்தார். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு ஆடுகள் அலறல் சத்தம் கேட்டுள்ளது.இருசப்பன் எழுந்து வந்தபோது, இரண்டு ஆடுகளின் கழுத்தை குதறி

குடியாத்தம்-குடியாத்தம் அருகே, 11 ஆடுகளை சிறுத்தைகள் கடித்து கொன்றதால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொலத்தான்பட்டியைச் சேர்ந்தவர் இருசப்பன், 45; விவசாயி. இவர், தன் ஆடுகளை ஆட்டுப்பட்டியில் கட்டி வைத்திருந்தார். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு ஆடுகள் அலறல் சத்தம் கேட்டுள்ளது.இருசப்பன் எழுந்து வந்தபோது, இரண்டு ஆடுகளின் கழுத்தை குதறி கொன்று, வாயில் கவ்வியபடி சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இரண்டு ஆடுகள் கழுத்து குதறி இறந்து கிடந்தன.

அப்பகுதியில், மேலும் மூன்று விவசாயிகளுக்கு சொந்தமான ஏழு ஆடுகள், சிறுத்தை கடித்து குதறியதால் இறந்து கிடந்தன. குடியாத்தம் வனத் துறையினர் வந்து, சிறுத்தைகளின் கால் தடத்தை ஆய்வு செய்தபின் கூறியதாவது:ஆந்திர மாநிலம், சித்துார் வனப்பகுதியில் இருந்து, 30க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் குடியாத்தம் வனப் பகுதிக்குள் வந்துள்ளன. வனப் பகுதியை ஒட்டியுள்ள துருகம், கொலத்தான்பட்டி உள்ளிட்ட, 10 பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூண்டு வைத்து சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.கடந்த ஒரு வாரத்தில், 100க்கும் மேற்பட்ட ஆடுகளை சிறுத்தைகள் துாக்கிச் சென்றதால், இப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X