விருதுநகர்--முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பணம் மோசடி புகார் கொடுத்த வெம்பக்கோட்டை அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பி 54, கோவில்பட்டி புளியங்குளம் அருகே நேற்று கைது செய்யப்பட்டார்.விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையை சேர்ந்த விஜயநல்ல தம்பி, ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று ரூ.3 கோடியை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்ததாக, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதே போல் சாத்துார் ரவீந்திரன், தனது உறவினருக்கு வேலை வாங்கி கொடுக்க பல தவணைகளில் ரூ.30 லட்சத்தை, விஜயநல்லதம்பியிடம் கொடுத்ததாக போலீசில் புகார் செய்தார். ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார். 3 மாதமாக தலைமறைவாக இருந்த விஜய நல்லத்தம்பியை ,நேற்று துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புளியங்குளம் அருகே போலீசார் கைது செய்தனர். எஸ்.பி., மனோகர், டி.எஸ்.பி.,கண்ணன், இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE