திருப்புவனம்--சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக கருப்புச்சாமி 23, என்பவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.இலந்தைகுளம் கிராமத்தில் பொங்கலை ஒட்டி கார்த்திக் என்பவர் விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்தார். விழாவில் நேற்று முன்தினம் இரவு சிவானந்தம் என்பவர் வந்து மைக்கில் பேசியதை தட்டி கேட்டதையடுத்து தகராறு ஏற்பட்டு அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர்.
மீண்டும் இரவு கார்த்தியுடன் சிவானந்தம் 24, சிவா, 26, ராஜ்குமார் 20, சரத்குமார் 20, கண்ணன் 19, ஆகியோர் தகராறு செய்துள்ளனர். அங்கு வந்த கருப்புச்சாமி, அருண்குமார் 22, கார்த்திக்கிற்கு ஆதரவாக பேச, ஆத்திரமடைந்தவர்கள் விலங்குகளை வேட்டையாட உதவும் சுளுக்கி என்ற ஆயுதத்தால் குத்தியதில் கருப்புச்சாமி உயிரிழந்தார்.அருண்குமார் காயமடைந்தார். கொலை வழக்கில் சிவானந்தம், சிவா உள்ளிட்ட ஐந்து பேரையும் திருப்புவனம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE