குழந்தைக்கு தொல்லை மாணவர் மீது வழக்கு| Dinamalar

குழந்தைக்கு தொல்லை மாணவர் மீது வழக்கு

Added : ஜன 16, 2022 | |
திண்டிவனம்-சென்னையைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லுாரி மாணவர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் திர்ஷாத், 21; சென்னையில் உள்ள கல்லுாரியில் எம்.எஸ்சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், ஊருக்கு வந்திருந்த, சென்னையை சேர்ந்த

திண்டிவனம்-சென்னையைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லுாரி மாணவர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் திர்ஷாத், 21; சென்னையில் உள்ள கல்லுாரியில் எம்.எஸ்சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், ஊருக்கு வந்திருந்த, சென்னையை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு, கடந்த மாதம் 22ம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இது பற்றி தெரிந்த குழந்தையின் தாய், திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். திர்ஷாத் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து இன்ஸ்பெக்டர் பிரேமா விசாரித்து வருகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X