சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

நடிகரின்வக்கிர பார்வை!

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | கருத்துகள் (3)
Advertisement
பி.என்.கபாலி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமரின் பாதுகாப்பு கேள்விக்குறியானது குறித்து, பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தன் கவலையை, 'டுவிட்டர்' மூலம் பதிவிட்டிருந்தார். பதிலுக்கு, நடிகர் சித்தார்த் செய்த, டுவிட்டர் கீழ்த்தரமானது; ஆணாதிக்கம் உடையது!காரணமே இன்றி, நம் பிரதமர் மீது வெறுப்புணர்வு கொண்டோர்,
 இது உங்கள் இடம்

பி.என்.கபாலி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமரின் பாதுகாப்பு கேள்விக்குறியானது குறித்து, பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தன் கவலையை, 'டுவிட்டர்' மூலம் பதிவிட்டிருந்தார். பதிலுக்கு, நடிகர் சித்தார்த் செய்த, டுவிட்டர் கீழ்த்தரமானது; ஆணாதிக்கம் உடையது!
காரணமே இன்றி, நம் பிரதமர் மீது வெறுப்புணர்வு கொண்டோர், இந்நாட்டில் சிலர் உள்ளனர். பிரதமர் மோடி மீது ஊழல் குற்றம் இல்லை; குடும்ப அரசியல் நடத்தவில்லை. 'மதவாதி' என்ற பொய் குற்றம் சாட்டலாம்என்றால், அதற்கு ஆதாரமில்லை.'மொழி வெறி உள்ளவர்' என்றும் சொல்ல முடியவில்லை; எல்லா மொழிகளையும் அவர் நேசிக்கிறார். உலகம் போற்றும் தலைவராக உள்ளார். அவர், ஹிந்துவாக வாழ்கிறார்; ஆனால், மற்ற மதங்களை வெறுக்க வில்லை. அரபு நாடுகளுடன் நட்பு பாராட்டுகிறார்; போப்பாண்டவரை கட்டி அணைக்கிறார்.
வெற்று கம்யூனிசம் பேசவில்லை; ஆனால், உழைக்கும் வர்க்கத்தை ஆராதிக்கிறார். உலக தலைவர்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.சீனா, பாகிஸ்தான் அத்துமீறலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் அளவிற்கு, நம் தேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளார்.இதுவரை நாம் பார்த்த தலைவர்களிடம் இருந்து, வேறுபட்டவராக உள்ளார். தேச பக்தியும், மனிதாபிமானமும் அவரிடம் தெரிகிறது.ஊழல், அநியாயத்திற்கு எதிராக கண்டிப்பு காட்டுகிறார்; ஊழல், மோசடிக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருவதால், பலருக்கும் அது இடைஞ்சலாக உள்ளது.
அவரை எதிர்ப்போர் அனைவரும், குறுக்கு வழியில் பணம் சேர்த்தோர் என்பதை கவனியுங்கள்.அப்படிப்பட்ட கூட்டத்தில் ஒருவர் தான், நடிகர் சித்தார்த். இவரிடமிருந்து இதுவரை தேச நலன் சார்ந்த ஒரு கருத்தும் வெளியானதில்லை; பிரதமர் மோடியின் மீது எதிர்மறையான விமர்சனம் மட்டுமே செய்கிறார்.பிரதமர் மோடியின் நேர்மையால், ஏதோ ஒரு வகையில் இவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தோன்றுகிறது.
இம்முறை, 'மோடி வெறுப்பு' என்பது, பெண்களை இழிவுபடுத்துவதில் இவரை தள்ளிஉள்ளது. பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின்கருத்துக்கு, நடிகர் சித்தார்த் பதிவிட்ட பதில் கருத்து தரக்குறைவானது மட்டுமல்ல; பெண்கள் மீதான அவரின் வக்கிர பார்வையை காட்டுகிறது. சட்டம் அவர் மீது பாய வேண்டும். மன்னிப்பு கேட்டார் என்பதற்காக, அவர் திருந்தி விட்டார் என்று அர்த்தமில்லை.பண்புள்ளோர், நற்குடியில் பிறந்தோர், பெண்கள் குறித்து அநாகரிகமாக பேச மாட்டார்கள்.



மணல்மாபியாக்களுக்குகொண்டாட்டம்!


அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: ஆற்று மணல் விற்பனைக்கான புதிய நடைமுறைகள் அடங்கிய அரசாணையை நீர்வளத்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 1 யூனிட் மணல் 1,000 ரூபாய் என்ற விலையில், பொது மக்களுக்கு 'ஆன்லைன்' முறையில் வழங்கப்பட உள்ளது.
ஆன்லைன் பதிவில் பழைய நடைமுறையிலுள்ள நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். சாதாரண ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், மணல் கிடைக்க வேண்டும். யார் வேண்டுமானாலும், எந்த லாரியை வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்க வேண்டும்.அரசு சார்பிலேயே லாரிகளுக்கு நியாயமான வாடகையை நிர்ணயித்து, அதையும் ஆன்லைன் வழியே செலுத்த ஏற்பாடு செய்யலாம். அப்படி செய்தால் தான், குறைந்த பட்ஜெட்டில் கட்டடம் கட்டும் மக்கள் நிம்மதி அடைவர்.
இல்லையென்றால், 3 யூனிட் ஆற்று மணல் வாங்குவதற்கு, அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகை 3,000 ரூபாய், குவாரிக்கு கொடுக்கும் லஞ்சம், லாரிக்கான அதிகப்படியான வாடகை, கூலி ஆகியன சேர்த்து, 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கும்.இது, மணல் மாபியாக்களுக்கு கொண்டாட்டமாக அமையும்; மக்களுக்கு திண்டாட்டமாக இருக்கும்.
எனவே சரியான கட்டணத்தில் வாடகை லாரிகளை நியமித்து, உரிய முழுத் தொகையையும் ஆன்லைன் வாயிலாகவே பெற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இயற்கை கொடுத்த மண் வளத்தை, நம் தமிழ் மக்கள் பயன்படுத்த, முதல்வர் ஸ்டாலின் வழிவகுப்பாரா?


திட்டம் தீட்டுமா அரசு?


அ.குணா, கடலுாரிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. தமிழகத்தில், 54 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள் ஆண்டு வருகின்றன.ஆனால் இன்று வரை, அரசு தரும் இலவச பொருட்களை வாங்கி தான், பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டிய நிலையில் தமிழக மக்கள் உள்ளனர் என்றால், அதற்கு என்ன காரணம்?
இன்றும் அரசு பள்ளி, கல்லுாரி, மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு இல்லை. சாலை, குடிநீர், கழிப்பறை என அடிப்படை வசதிகள் இல்லாமல், எத்தனையோ கிராமங்கள் உள்ளன. இவற்றிற்கு, நியாயமான முறையில் நிதி ஒதுக்கீடு செய்ய முயற்சி செய்யாமல், மக்கள் வரிப்பணம் 1,300 கோடி ரூபாயை வீண் செய்யும் வகையில், தரமில்லாத, இலவச பொருட்களை வழங்குவது, கண்டனத்திற்கு உரியது.இலவச பொருட்கள் வழங்குவதற்கு பதிலான பணமாக கொடுத்து இருந்தால், தரமான பொருட்களை வாங்கி, மக்கள் பலன் அடைந்திருப்பர்.
எல்லாவற்றையும் விட, மக்கள் தங்களது சொந்த உழைப்பில் சம்பாதித்து, அதன் மூலம் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க வழி வகுப்பது தான், சிறந்த ஆட்சியாக இருக்க முடியும்.அத்தியாவசிய தேவைக்காக மக்களை, ரேஷன் கடை வாசலில் கையேந்தி நிற்க செய்வது, அரசுக்கு அழகல்ல!
எம்.எல்.ஏ., - எம்.பி., என, ஐந்து ஆண்டுகள் பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள், பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து குவித்து விடுகின்றனர். அவர்களை தேர்ந்தெடுக்கும் மக்கள் தான், வாழ்நாள் முழுதும் பிச்சைக்காரர்களாக இருக்கின்றனர்.
நலத்திட்டங்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியில் பெரும் பங்கு, 'கமிஷன்' என்ற வகையில், மக்கள் பிரதிநிதிகளுக்கு சென்று விடுகிறது. இதை தடுத்தாலே, மக்களின் வறுமையை போக்கி விடலாம்.இனியாவது தமிழக மக்கள் தங்களது சொந்த உழைப்பில் முன்னேற, அரசு திட்டம் தீட்ட வேண்டும்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
17-ஜன-202220:06:25 IST Report Abuse
D.Ambujavalli ஆட்சிக்கு வரும் முன்பு, முன்னால் ஆண்டவர்களை எதற்காக விமர்சித்தார்களோ, அதே மூன்று ‘சி’ க்களுடன் கொண்டாட்டமாக ஆட்டம் போடத்தான் இவர்கள் வந்திருக்கிறார்கள் ஓட்டுப்போட்டு உட்கார்த்தியவர்களைக் கையேந்த வைக்கும் மகத்தான ‘சேவை’யுடன் மாநிலக்கடனை ஏற்றிக்கொண்டு போவதும்தான் இவர்கள் செய்யும் ஆட்சி அழகு
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
17-ஜன-202210:45:55 IST Report Abuse
periasamy இங்கு அரசியல்தான் நடந்துள்ளது எங்கே ஆணாதிக்கம் வந்தது?
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
17-ஜன-202210:43:55 IST Report Abuse
Nellai tamilan இந்த வக்கிரம் பிடித்த நடிகன் உதய நிதியின் கைதடி அதனால் சட்டம் தன கடமையை சரியாக செய்யாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X