வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-'டெஸ்லா' மின்சார கார் தயாரிப்பு தொழிற்சாலையை தங்கள் மாநிலத்தில் அமைக்கும்படி தெலுங்கானாவை தொடர்ந்து மஹாராஷ்டிராவும், எலான் மஸ்குக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க தொழில்அதிபர் எலான் மஸ்க்கின் 'டெஸ்லா' நிறுவனம், 'பேட்டரி'யால் இயங்கும் மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த கார்களை நம் நாட்டிலும் விற்பனை செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். 'இந்தியாவில் டெஸ்லா நிறுவன கார் தயாரிப்பு எப்போது துவங்கும்' என, மஸ்கிடம் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, 'தொழிற்சாலை துவங்குவதில் உள்ள பல்வேறு சவால்களை நீக்கும் முயற்சியில் அரசுடன் பேச்சு நடத்தி வருகிறேன்' என பதில் அளித்திருந்தார்.
இதையடுத்து தங்கள் மாநிலத்தில் டெஸ்லா கார் தயாரிப்பு தொழிற்சாலையை துவங்கும்படி தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமா ராவ் ஏற்கனவே அழைப்பு விடுத்தார்.இந்நிலையில் மஹாராஷ்டிரா அரசும் எலான் மஸ்குக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து தேசியவாத காங்.,கை சேர்ந்த அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் கூறியதாவது:மஹாராஷ்டிரா 'டெஸ்லா' தொழிற் சாலையை அமைப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது. எனவே, டெஸ்லா நிறுவனத்தை இங்கு துவங்க எலான் மஸ்க் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பஞ்சாப், மேற்கு வங்க அரசுகளும் தங்கள் மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்க எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE