''மலை அழிப்பு ஜோரா நடக்குது வே...'' என்றபடியே பெஞ்சில்அமர்ந்தார், அண்ணாச்சி. ''என்னங்க சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''கடந்த ஆட்சி முதலே, குவாரி தொழிலதிபர் ஒட்டுமொத்த மலையை அழிச்சுட்டு வர்றாவ...
''மாவட்ட நிர்வாகம், வருவாய், வனம், கனிம வளமுன்னு அனைத்து அரசுத் துறை அதிகாரிகளின், 'ஆசி'யோட மலை அழிப்பு ஜோரா நடக்குது வே...
''விவசாயிகள் பல முறை புகார் கொடுத்தும், போராட்டம் நடத்தியும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கலை வே...
''முதல்வர் ஸ்டாலின், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு என, தி.மு.க.,வுல தனி அமைப்பு துவங்கினால் மட்டும் போதுமா... பசுமையான மலை அழிக்கிறதை தடுக்க வேண்டாமான்னு சமூக ஆர்வலர்கள் கேக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''அங்கே மலையை அழிக்கறா... இங்கே காட்டை அழிக்கறா ஓய்...'' என அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.
''என்ன இப்படி கிளம்பிட்டாங்க... நீங்க விஷயத்தை சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''நீலகிரி மாவட்டம், கூடலுார் வனக் கோட்டத்துல, கட்டுக்குள் இருந்த மரக்கடத்தல் இப்போ மீண்டும் அதிகரிச்சுண்டு வரது ஓய்...
''சேரம்பாடி, பிதர்காடு வனச்சரகத்துல தனியார் நிலங்கள்ல இருக்கற மரங்களை வெட்டி கேரளாவுக்கு கடத்திண்டு போறா ஓய்...
''வனத்துறையினர், 'தனியார் நிலத்துல இருக்குற மரங்களை வெட்டினால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது'ன்னு சொல்றா...வருவாய் துறையினரோ, 'மரக்கடத்தலுக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை'ன்னு சொல்றா ஓய்...
''மர கடத்தலை யார் தடுக்கறதுன்னு இவா சண்டை போட்டுண்டு இருக்கறதால, கடத்தல்காரா 'குஷியா' இருக்கா ஓய்...''அய்யன்கொல்லி, விலங்கூர் பகுதி எல்லாம் மொட்டை காடுகளாக மாறிண்டு இருக்கு ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''சேலம் மாவட்ட தி.மு.க., செயலராக இருந்த, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு அப்புறம், அந்த மாவட்டத்தை மூணா பிரிச்சு, கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துச்சு பா...'' என கடைசி தகவலை சொல்ல ஆரம்பித்தார், அன்வர்பாய்...
''இப்படி மூணா பிரிச்சதால, சேலத்துல கோஷ்டி பூசல் அதிகமாகிடுச்சு... அதனால் தான், சட்டசபை தேர்தல்ல, சேலத்துல இருக்குற, 11 தொகுதிகள்ல, 10ல, தி.மு.க., தோத்துருச்சு பா...
''கோஷ்டி பூசலால,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும், தி.மு.க.,வுக்கு பாதிப்பு ஏற்படுமுன்னு, அக்கட்சி தலைமைக்கு உளவுப்பிரிவு போலீசார் அறிக்கை கொடுத்துருக்காங்க பா...
''இதனால நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேருவை, சேலம் மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக, முதல்வர் ஸ்டாலின் நியமிச்சாரு பா...
''சேலம் தி.மு.க., நிர்வாகிகளை கண்காணிக்க, அமைச்சர் நேரு ஒரு கண்காணிப்பு குழு அமைச்சுஇருக்காராம்... அந்த குழு, கட்சி பதவியில் இருந்து துாக்க வேண்டியவங்க பட்டியலை தயாரிச்சு இருக்காம் பா...
''நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு அப்புறம், சேலம் தி.மு.க., சீட்டு கட்டு மாதிரி கலைச்சு போடப்படுமுன்னு பேசிக்கிறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.நண்பர்கள் கிளம்பினர்; பெஞ்ச் அமைதியானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE