அலங்கார ஊர்திக்கு தடை மம்தா கடும் கண்டனம்

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
கோல்கட்டா-'குடியரசு தின அணிவகுப்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய அலங்கார ஊர்திகளுக்கு எந்தவித காரணமும் தெரிவிக்காமல் மத்திய அரசு தடை விதித்துள்ளதை ஏற்க முடியாது' என, பிரதமர் மோடிக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். குடியரசு தினம் வரும் 26ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டில்லியில் பிரமாண்ட அணி வகுப்புக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோல்கட்டா-'குடியரசு தின அணிவகுப்பில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய அலங்கார ஊர்திகளுக்கு எந்தவித காரணமும் தெரிவிக்காமல் மத்திய அரசு தடை விதித்துள்ளதை ஏற்க முடியாது' என, பிரதமர் மோடிக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.



latest tamil news


குடியரசு தினம் வரும் 26ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டில்லியில் பிரமாண்ட அணி வகுப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளது.இந்த அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள் இடம் பெறும். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

டில்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில், மேற்கு வங்கம் சார்பில் மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் வாழ்க்கை வரலாற்றை தெரிவிக்கும் வகையில் அலங்கார ஊர்தி இடம் பெற திட்டமிடப்பட்டது. இதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியானது.


latest tamil news


இதையடுத்து, பிரதமர் மோடிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:எந்தவிதமான காரணமும் கூறாமல் மேற்கு வங்க ஊர்திக்கு குடியரசு தின விழாவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது; இது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. எனக்கு மட்டுமல்லாமல், மேற்கு வங்க மக்களுக்கும் மத்திய அரசின் இந்த முடிவு, கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. சுதந்திர போராட்டத்தில் மேற்கு வங்கம் மிகப் பெரிய பங்களித்துஉள்ளதை மத்திய அரசு மறந்து விடக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஜன-202216:33:29 IST Report Abuse
அப்புசாமி ஒண்ணும் குறைஞ்சிடாது. அதே அலங்கார ஊர்தியை கொல்கத்தாவில் ஓட்டி உங்க தேஷ்பக்தியை காட்டுங்க. தமிழ்நாட்டுலேயும் அதே கதைதான். நாடு எங்கே போகுதுன்னு தெரியலை.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
17-ஜன-202214:28:10 IST Report Abuse
Samathuvan நீங்கள் சரியான மன நிலையில் இல்லை என்பதயே இது காட்டுகிறது . ஆனாலும் நீங்கள் என்ன செய்தாலும் ஊ பீ ல ஆப்பு தான் என்பதை தாங்கள் நன்றாக அறிவீர்கள். எனவே ஸெல்ப் கோரண்டைனில் கொஞ்சம் ஒய்வு எடுத்து கொஞ்சம் சுயமாக சிந்திக்கவும். வேற மாநிலமாவது மிஞ்சும்.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
17-ஜன-202211:23:46 IST Report Abuse
Dhurvesh . உங்கள் பக்கம் வரமாட்டான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X