சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

'விவசாயிகள் சிந்தித்து செயல்படணும்!'

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | கருத்துகள் (1)
Advertisement
முனைவர் சீனிவாசன் ராமசாமி: அந்தக் காலத்தில் பெரும்பாலான தானியங்கள், பயறு வகைகள் மற்றும் நிலக்கடலை போன்றவற்றை அறுவடை செய்த பின், அந்த செடிகளை உலர வைத்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்திக் கொண்டோம். கால்நடைகளின் கழிவுகளை மட்க வைத்து உரமாகப் பயன்படுத்திக் கொண்டோம்.தோட்டங்களை சுற்றிலும் உயிர் வேலிகள் இருந்தன. அவற்றிலிருந்து கிடைக்கும் இலை, தழைகளை தீவனமாகவும்,
சொல்கிறார்கள்

முனைவர் சீனிவாசன் ராமசாமி: அந்தக் காலத்தில் பெரும்பாலான தானியங்கள், பயறு வகைகள் மற்றும் நிலக்கடலை போன்றவற்றை அறுவடை செய்த பின், அந்த செடிகளை உலர வைத்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்திக் கொண்டோம். கால்நடைகளின் கழிவுகளை மட்க வைத்து உரமாகப் பயன்படுத்திக் கொண்டோம்.
தோட்டங்களை சுற்றிலும் உயிர் வேலிகள் இருந்தன. அவற்றிலிருந்து கிடைக்கும் இலை, தழைகளை தீவனமாகவும், பசுந்தாள் உரமாகவும் பயன்படுத்திக் கொண்டோம். அந்த வேலிகளில் இருந்த மரம் மற்றும் செடி, கொடிகளில் பூக்கும் பூக்களைத் தேடி, மகரந்த சேர்க்கைக்கு உதவி புரியும் தேனீக்கள், குளவிகள் வந்தன. மேலும், அந்த பூக்கள், நம் பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை அழித்தொழிக்கும் இயற்கை எதிரிகளான ஒட்டுண்ணிகளையும், இரை விழுங்கிகளையும் ஈர்த்து வந்தன.

ஆக, அன்றைய விவசாயம் இயற்கையோடு இணைந்த விவசாயமாக இருந்தது.இந்தத் தத்துவத்தை தான் இன்றைக்கு, 'வேளாண் சூழலியல் அணுகுமுறைகள், சுழற்சி விவசாயம், மீளுருவாக்க விவசாயம்' என்று வெவ்வேறு பெயரிட்டு, இந்த உலகம் அழைத்துக் கொண்டிருக்கிறது. உழவு மாடுகளையும், ஆட்டுப்பட்டிகளையும், உயிர் வேலிகளையும் முற்றிலும் துறந்து விட்ட நாமும், ஏதோ இந்தத் தொழில்நுட்பங்கள், தேவதுாதர்களால் நமக்கு அனுப்பப்பட்டவை போல் வியந்து பார்த்து, பாராட்டிக் கொண்டிருக்கிறோம்.
தேவையில்லாமல் மண்ணைக் உழுது கொண்டிருக்க கூடாது. அப்படி செய்யும்போது மண்ணில் இருக்கும் நன்மை தரும் நுண்ணுயிர்கள், மண் புழுக்கள் அழியும். மண்ணிலிருந்து மிக அதிகமாக கரியமில வாயு வெளிப்பட்டு, பருவகால மாறுபாட்டுக்கும் வித்திடுகிறது. எனவே, தேவையில்லாமல் மண்ணில் கலப்பைகளை போட்டு உழாமல் இருந்தால், மேற்சொன்ன அத்தனை கெடுதல்களையும் தவிர்க்கலாம்.
நெல் அறுவடை முடிந்தவுடனே அதில் உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறு வகைகளை ஊன்றவோ, விதைக்கவோ செய்யலாம். வயலில் எஞ்சியிருக்கும் ஈரப்பதத்திலேயே அவை முளைத்து விடும். காய்கறிகளை கூட அப்படி பயிரிட முடியும். நெல் அறுவடை முடிந்த பின் மண்வெட்டியால் குழி எடுத்து, அவற்றில் தக்காளி நாற்றுகளை நடவு செய்து, வெற்றிகரமாக அறுவடை செய்ய முடியும்.ஒற்றைப் பயிர் சாகுபடி முறைகள், நிலவளத்துக்கு மிகப்பெரும் தீங்கை விளைவிப்பவை. விவசாயிகள் சிந்தித்துச் செயல்படுவது நல்லது!

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
17-ஜன-202214:45:04 IST Report Abuse
M  Ramachandran நல்ல கருது. ஒரு ஈய்பது அறுபது வருடங்களுக்கு முன் கோடை கால பயிராக வீட்டுக்கு வேண்டிய பயறு மற்றும் உளுந்து பயிரிட்டு சுய தேவயை இடு கட்டினார். இபோலாது சோம்பாரி தனம் மிகுந்து எல்ல வற்றிற்கும் அரசை குறை கூறி அரட்டை அடித்து காலம் கடத்து கின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X