இளைஞர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தும் பாக்., பயங்கரவாதிகள்

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | கருத்துகள் (4)
Advertisement
ஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீர் இளைஞர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை பாக்., பயங்கரவாதிகள் பகடைக்காய்களாக பயன்படுத்தி வருவதாக, பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். விசாரணைஜம்மு - காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், வாசிம் காதிர் மிர் என்ற உள்ளூர் இளைஞர் உயிரிழந்தார்.இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீர் இளைஞர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை பாக்., பயங்கரவாதிகள் பகடைக்காய்களாக பயன்படுத்தி வருவதாக, பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.latest tamil news


விசாரணைஜம்மு - காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், வாசிம் காதிர் மிர் என்ற உள்ளூர் இளைஞர் உயிரிழந்தார்.இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது, பாதுகாப்புப் படையினருக்கு பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்து பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளதாவது:தாக்குதலில் இறந்த அந்த இளைஞரின் உடலை பரிசோதித்தபோது, நாங்கள் சுடுவதற்கு முன்பாகவே, அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர் சரணடைய விரும்பியதாகவும், உடன் வந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுட்டுக் கொன்றதும் தெரிய வந்துள்ளது.கடந்த பல ஆண்டுகளாகவே பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளது.


latest tamil news


காஷ்மீரில் உள்ளூர்வாசிகள் அரசுக்கு எதிராக பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதாகவும் உலக அளவில் பாக்., பிரசாரம் செய்து வந்துள்ளது.ஆசை வார்த்தைஇதற்காக பாக்., பயங்கரவாதிகள் உள்ளூர் இளைஞர்களுக்கு ஆசை வார்த்தை கூறி அல்லது துாண்டிவிட்டு, தங்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி வந்துள்ளனர்.பாக்.,கின் இந்த முயற்சிகளை முறியடிப்பதே தற்போதைய முக்கிய பணியாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-ஜன-202210:14:49 IST Report Abuse
Lion Drsekar பெயருக்குத்தான் ஜம்மு காஷ்மீர் இவைகள் இரண்டும் ஒரு குறுநில மன்னர்களின் குடும்ப பிடியில்தான் இருந்தது ஆனால் அவைகள் அண்டைநாட்டுக்கு சொந்தமாக இருந்துவந்தது, அவர்கள் அனுபவித்து வந்தது இந்திய மக்களின் வரிப்பணம் இன்னமும்? நீறுபூத்த நெறுபப்க வாழ்ந்துவரும் அவர்கள் மற்றும் அவர்கள் வளர்த்துவிட்ட இயக்கங்கள், அவர்களுக்காகவே இயங்கிய எல்லா அமைப்புகள் அண்டைநாட்டுக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள், இவர்கள் தங்களை இந்தியர்கள் என்று கூறியதே இல்லை, அப்படி இருக்க என்ன செய்யமுடியும், தற்போது ஏற்பட்ட மாறுதல்களால் வேறு மாநிலத்தவர்கள் அங்கு வியாபாரம் , குடியேறுதல், அந்த ஊர் குடும்பத்தாருடன் சம்மந்தம் செய்வது ஏதாவது ஒன்று நடந்திருக்கிறதா? வந்தே மாதரம்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
17-ஜன-202206:20:02 IST Report Abuse
வெகுளி எந்த மதமும் வன்முறையை ஆதரிக்காது என்பதை இளைஞர்களுக்கு போதிக்க வேண்டிய கடமை மத குருமார்களுக்கு உள்ளது...
Rate this:
Cancel
shyam -  ( Posted via: Dinamalar Android App )
17-ஜன-202205:44:45 IST Report Abuse
shyam அது இங்கிருக்கும் பாக்கிகளுக்கு புரியவில்லை. அந்த தீவிரவாதிகளுக்கு ஆதாரவாக குரல் கொடுப்பது மட்டுமே இவர்கள் வேலை. உலக வரைபடத்திலிருந்து பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் இந்த இரு நாடுகளையும் உலகின் மற்ற நாடுகள் ஒதுக்கி வைக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X