வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீர் இளைஞர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை பாக்., பயங்கரவாதிகள் பகடைக்காய்களாக பயன்படுத்தி வருவதாக, பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைஜம்மு - காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், வாசிம் காதிர் மிர் என்ற உள்ளூர் இளைஞர் உயிரிழந்தார்.இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது, பாதுகாப்புப் படையினருக்கு பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளதாவது:தாக்குதலில் இறந்த அந்த இளைஞரின் உடலை பரிசோதித்தபோது, நாங்கள் சுடுவதற்கு முன்பாகவே, அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர் சரணடைய விரும்பியதாகவும், உடன் வந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுட்டுக் கொன்றதும் தெரிய வந்துள்ளது.கடந்த பல ஆண்டுகளாகவே பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளது.
காஷ்மீரில் உள்ளூர்வாசிகள் அரசுக்கு எதிராக பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதாகவும் உலக அளவில் பாக்., பிரசாரம் செய்து வந்துள்ளது.ஆசை வார்த்தைஇதற்காக பாக்., பயங்கரவாதிகள் உள்ளூர் இளைஞர்களுக்கு ஆசை வார்த்தை கூறி அல்லது துாண்டிவிட்டு, தங்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி வந்துள்ளனர்.பாக்.,கின் இந்த முயற்சிகளை முறியடிப்பதே தற்போதைய முக்கிய பணியாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE