கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு தொடரும் புவியியல் நிபுணர்கள் எச்சரிக்கை

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | கருத்துகள் (3)
Advertisement
வெலிங்டன்-பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள டோங்கோ நாட்டில் கடலுக்கடியில் இருந்த எரிமலை வெடித்துச் சிதறி, 'சுனாமி' அலை தாக்கியது, உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 'இங்கு இது போன்ற எரிமலை வெடிப்பு தொடரும்' என புவியியல் நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி நாடு டோங்கோ. இங்குள்ள ஹங்காஹபாய் மற்றும் ஹங்காடோங்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வெலிங்டன்-பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள டோங்கோ நாட்டில் கடலுக்கடியில் இருந்த எரிமலை வெடித்துச் சிதறி, 'சுனாமி' அலை தாக்கியது, உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.



latest tamil news



'இங்கு இது போன்ற எரிமலை வெடிப்பு தொடரும்' என புவியியல் நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி நாடு டோங்கோ. இங்குள்ள ஹங்காஹபாய் மற்றும் ஹங்காடோங்கா தீவுகளில் அடிக்கடி எரிமலை வெடிப்பு ஏற்படும். 5,900 அடி உயரம்இங்கு கடல் மட்டத்தில் இருந்து, 300 அடி உயரமுள்ள ஒரு எரிமலை உள்ளது. ஆனால் கடலுக்கு அடியில் 5,900 அடி உயரமும், 20 கி.மீ., துாரத்துக்கும் மிகப் பெரிய எரிமலையாக பரந்து விரிந்திருந்தது.இந்த எரிமலை சமீபத்தில் வெடித்து சிதறியது.

இதன் தொடர்ச்சியாக டோங்கோவில் உள்ள குட்டித் தீவுகளை சுனாமி அலை தாக்கியது. குடியிருப்பு பகுதிக்குள் கடல் நீர் புகுந்த 'வீடியோ'க்கள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து புவியியல் நிபுணர்கள் கூறியுள்ளதாவது:வழக்கமாக கடலுக்கடியில் இருக்கும் எரிமலைகள் வெடிக்கும்போது பாறைக் குழம்புகள் கடல் நீரில் படும்போது, அந்த சூட்டில் ஆவி உருவாகி, பாறைக் குழம்புகளின் வெப்பத்தை தணிக்கும். 1,200 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை இருந்தாலும், எரிமலைக் குழம்பை கடல் நீர் தணிய வைத்துவிடும்.


latest tamil news



பொதுமக்கள் பீதி

ஆனால் தற்போது எரிமலை திடீரென வெடித்து சிதறியுள்ளது. ஒரே நேரத்தில் நிறைய எரிமலைக் குழம்பு உருவானதால், அதை உடனடியாக தணிக்க முடியவில்லை.அந்தக் குழம்புகள் மீண்டும் எரிமலை பள்ளத்துக்குள் சென்று வெடிப்பை அதிகரித்துள்ளன. இது போன்ற சம்பவம் 1,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். டோங்கோவில் அடுத்த சில ஆண்டுகளில் இது போன்ற தொடர் எரிமலை வெடிப்புகள் ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதற்கிடையே எரிமலை வெடிப்பு காரணமாக பசிபிக் கரையோர பகுதிகளில் சுனாமி அலைகள் எழுவது குறைந்துள்ளது. ஆனாலும் கடல் பகுதியில் கடுமையான புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
17-ஜன-202214:23:20 IST Report Abuse
THINAKAREN KARAMANI புவி வெப்பமயமாதல் என்னும் நிலை உச்சக்கட்டத்தை நெருங்கிவிட்டதற்கான அறிகுறியாகவே இதைப் பார்க்க வேண்டும். எனவே நம் பூவுலகைக் காக்க உலக விஞ்ஞானிகள் புவி வெப்பமயமாதலைத் தடுக்க தீவிரமாக முடிவெடுக்க வேண்டும். விரைவாக அமுல்படுத்தி பூவியைக் காக்க வேண்டும்.
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
17-ஜன-202207:48:37 IST Report Abuse
venkatan இதனால் புவியின் குறிப்பாகக் கடலின் சீதோஷ்ண நிலை பாதிக்கப்பட்டு கடலின் இயல்பான நீரோட்ட வெப்பமும் அது தொடர்பான பருவ நிலை மாறுபாடுகளை உலக நாடுகள் எதிர்கொள்ள வேண்டியத்திருக்கும்.இதுவும் இயற்கையின் ஒரு எதிர் செயல்பாடுத்தான்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-ஜன-202205:16:35 IST Report Abuse
Kasimani Baskaran இது போன்ற பெரிய அளவிலான எரிமலை வெடிப்புத்தான் வளிமண்டலத்துக்குள் ஏறாளமான புகையை அனுப்பி பல மாதங்களுக்கு சூரியனை மறைத்து துருவப்பகுதிகளில் பனிக்கட்டி உருவாக ஏதுவாக்கி மனித நாகரீகத்தின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியிருக்க வேண்டும். இல்லை என்றால் துருவப்பகுதிகளில் பனிக்கட்டி உருவாக வாய்ப்பே இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X