இசை கருவிகளை எரித்து தலிபான்கள் அட்டூழியம்

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | கருத்துகள் (35) | |
Advertisement
காபூல்-ஆப்கானிஸ்தானில் கல்யாண வீட்டில் புகுந்து, இசைக் கலைஞரின் இசைக் கருவியை தலிபான்கள் தீயிட்டு எரிக்கும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின், பல பிற்போக்கான விதிமுறைகள் மீண்டும் அமலுக்கு வந்தன.'டிவி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்கக் கூடாது' என ஆப்கன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காபூல்-ஆப்கானிஸ்தானில் கல்யாண வீட்டில் புகுந்து, இசைக் கலைஞரின் இசைக் கருவியை தலிபான்கள் தீயிட்டு எரிக்கும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



latest tamil news


தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின், பல பிற்போக்கான விதிமுறைகள் மீண்டும் அமலுக்கு வந்தன.'டிவி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்கக் கூடாது' என ஆப்கன் அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும், ஜவுளி விற்பனை செய்யும் கடைகளில் வைக்கப்படும் ஆண், பெண் பொம்மைகள் தலையின்றி வைக்கப்பட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

திருமணங்களில் இசை நிகழ்ச்சிகளை நேரடியாக நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாக்தியா மாகாணத்தில் உள்ள ஸஸாய் அருப் மாவட்டத்தில், திருமண நிகழ்ச்சி நடந்த அரங்கத்திற்குள் தலிபான்கள் அதிரடியாக புகுந்தனர்.இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதையடுத்து, இசைக் கலைஞரிடம் இருந்து இசைக் கருவியை பறித்த தலிபான்கள் அதை தீயிட்டு எரித்தனர்.

தன் இசைக்கருவி தீயில் எரிவதைப் பார்த்த இசைக் கலைஞர் கதறி அழுதார். இதைப் பார்த்து தலிபான்கள் கைகொட்டி சிரித்தனர். அந்த திருமண வீட்டில் இருந்த பத்திரிகையாளர் அப்துல்லா ஓமேரி என்பவர், இந்த காட்சிகளை தன் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். தலிபான்களின் இந்த செயல், உலக அளவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


பெண்கள் பள்ளிக்கூடம்விரைவில் திறப்பு!கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி செய்தபோது கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொது வாழ்வில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த முறை தலிபான்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின், பெண்களுக்கான பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. இந்நிலையில், ''ஆப்கன் புத்தாண்டான மார்ச் 21க்கு பின் பெண்களுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்,'' என, அந்நாட்டு துணை அமைச்சர் ஸபிஹுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
17-ஜன-202219:13:44 IST Report Abuse
தமிழ்வேள் வளைகுடா நாடுகளிலும் அவர்களுடைய பாரம்பரிய நாட்டார் இசை உண்டு ...தனிப்பட்ட இசை கருவிகள் உண்டு ...இன்றும் இசைத்தல் இடம் பெறுகிறது ....இங்கு இசையை எதிர்ப்பவர்கள் , இந்த எதிர்ப்பு , இசைக்கருவி எரிப்பு வேலைகளை வளைகுடா நாடுகளில் போய் செய்யலாமே ? பொருத்தமாக இருக்கும் அல்லவா ?
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
17-ஜன-202216:14:07 IST Report Abuse
Vijay D Ratnam கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. மதத்தின் பெயரால் உசுப்பிவிடப்பட்ட படிப்பறிவில்லாத தற்குறி முண்டங்கள். குரங்கு கைல பூமாலை சிக்கியது போல இந்த லூசு கூமுட்டைகளிடம் ஆஃப்கானிஸ்தான் சிக்கி சின்னாபின்னம் ஆகிக்கொண்டு இருக்கிறது.
Rate this:
Cancel
Yesappa - Bangalore,இந்தியா
17-ஜன-202215:29:00 IST Report Abuse
Yesappa இரு மதங்கள் ஒரே இடத்தில் பிறந்தது .. ஒன்று ஐரோப்பிய நாடுகளில் மக்களை வளப்படுத்தியது .. இன்னொன்று சொல்வதற்கில்லை .. அல்லேலுயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X