சென்னை---எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா, தமிழக அரசு சார்பில் இன்று கொண்டாடப்படுகிறது.
அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சதிலீலாவதி எனும் படத்தின் வழியாக அறிமுகமானார். முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி படங்களின் வாயிலாக தனக்கென்று தனியிடம் பெற்றார். கருணாநிதியால் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட 'புரட்சி நடிகர்' என்ற பட்டம், பின்னாளில் 'புரட்சி தலைவர்' என்று நிலை பெற்றது.அரசியலில் மாறுபட்ட கருத்துகளை கொண்டிருந்தாலும், வாழ்நாளின் இறுதி வரையில், கருணாநிதியுடன் உயர்ந்த நட்பை போற்றி வந்தார்.
சென்னை யில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கு, எம்.ஜி. ஆரின் பெயரை சூட்டி, அதை கருணாநிதி திறந்து வைத்து பெருமை சேர்த்தார். எனவே, எம்.ஜி.ஆரின் நினைவை போற்றும் வகையில், அவரது பிறந்த நாள், இன்று சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காலை 10:00 மணி அளவில், அங்குள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, அமைச்சர்கள், எம்.பி.,க்கள், உயர் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE