வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்
அ.குணா, கடலுாரிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:
நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. தமிழகத்தில், 54 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள் ஆண்டு வருகின்றன.
ஆனால் இன்று வரை, அரசு தரும் இலவச பொருட்களை வாங்கி தான், பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டிய நிலையில் தமிழக மக்கள் உள்ளனர் என்றால், அதற்கு என்ன காரணம்?இன்றும் அரசு பள்ளி, கல்லுாரி, மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு இல்லை. சாலை, குடிநீர், கழிப்பறை என அடிப்படை வசதிகள் இல்லாமல், எத்தனையோ கிராமங்கள் உள்ளன.இவற்றிற்கு, நியாயமான முறையில் நிதி ஒதுக்கீடு செய்ய முயற்சி செய்யாமல், மக்கள் வரிப்பணம் 1,300 கோடி ரூபாயை வீண் செய்யும் வகையில், தரமில்லாத, இலவச பொருட்களை வழங்குவது, கண்டனத்திற்கு உரியது.
![]()
|
இலவச பொருட்கள் வழங்குவதற்கு பதிலான பணமாக கொடுத்து இருந்தால், தரமான பொருட்களை வாங்கி, மக்கள் பலன் அடைந்திருப்பர்.எல்லாவற்றையும் விட, மக்கள் தங்களது சொந்த உழைப்பில் சம்பாதித்து, அதன் மூலம் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க வழி வகுப்பது தான், சிறந்த ஆட்சியாக இருக்க முடியும்.அத்தியாவசிய தேவைக்காக மக்களை, ரேஷன் கடை வாசலில் கையேந்தி நிற்க செய்வது, அரசுக்கு அழகல்ல!
எம்.எல்.ஏ., - எம்.பி., என, ஐந்து ஆண்டுகள் பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள், பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து குவித்து விடுகின்றனர். அவர்களை தேர்ந்தெடுக்கும் மக்கள் தான், வாழ்நாள் முழுதும் பிச்சைக்காரர்களாக இருக்கின்றனர்.நலத்திட்டங்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியில் பெரும் பங்கு, 'கமிஷன்' என்ற வகையில், மக்கள் பிரதிநிதிகளுக்கு சென்று விடுகிறது. இதை தடுத்தாலே, மக்களின் வறுமையை போக்கி விடலாம்.இனியாவது தமிழக மக்கள் தங்களது சொந்த உழைப்பில் முன்னேற, அரசு திட்டம் தீட்ட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE